அதிக மின் கட்டண புகார்.. மக்களுக்கு குட் நியூஸ்..! மின்சார வாரிய தலைவர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

  • சென்னை: ஜூலை மாதத்தில் மிக அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், மூத்த அதிகாரிகள் மூலம் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்றும் அறிவித்தார். 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு முன்பு போலவே 100 யூனிட் மட்டும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். முந்தைய மாதங்களை விட 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் வந்துள்ளதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த முறை 300 ரூபாய் வந்த மின் கட்டணம் இந்த மாதம் 800 ரூபாய்க்கு மேல் வந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதிலும் 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என அறிவித்த போதும் மின்சார பயன்பாட்டு கட்டணம் அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    Advertisement

    வழக்கமாக கோடை காலங்களில் மின்சார பயன்பாடு அளவு அதிகரிப்பதால் மின் கட்டணம் உயர்வது வழக்கம். ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மிக அதிக மின்சார கட்டண பில் வந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மின் கட்டணம் வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

    ஜூலை மாதத்தில் மிக அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், மூத்த அதிகாரிகள் மூலம் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். முதன்மை பொறியாளர்கள் 25 இணைப்புகளையும், உதவிப் பொறியாளர்கள் 100 இணைப்புகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க மின்சார வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது ஏதேனும் பிழை கண்டறியப்பட்டால் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளவும் மின் வாரிய தலைவர் அருண் ராய் உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Following complaints regarding high electricity bills charged in July, the Chairman of the Tamil Nadu Electricity Board has ordered a review by senior officials.