சென்னை: ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்துத் தமிழக அரசு பரிசீலிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மாநிலக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் உட்பட சிலர் பணம் வாங்கி கொண்டு, எப்ஐஆரில் ஜெம் வீரமணி பெயரை சேர்க்காமல் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே காவல்துறையினரே விசாரிப்பது பெரும்பாலும் சமரசங்களுக்கு வழிவகுக்கக்கூடும். ஒருவேளை அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் விசாரணை நடைபெறுவதால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இவ்வழக்கை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதா அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அப்போது அவர், பிரபல தொழில் அதிபரான 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி, சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட 'வீடியோ' காட்சிகள் அடங்கிய 'பென்டிரைவ்'வை கொடுத்து சென்றார். புகாரின் பேரில் அப்போது விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொழில் அதிபர் வீரமணி மீதான வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தொழில் அதிபர் வீரமணி, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஏழை-எளிய குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த உதவிக்கு கைமாறாக 13 முதல் 18 வயது வரையிலான பல சிறுமிகளை சொகுசு பங்களாவில் வைத்து சீரழித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான 'வீடியோ' ஆதாரங்கள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தொழில் அதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரையும் 'போக்சோ' சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அனுமதி பெற்று புழல் சிறையில் வீரமணியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெற்றார்கள். இதனிடையே வீரமணியால் பாதிக்கப்பட்டதாக 9 சிறுமிகள் அடுத்தடுத்து புகார் அளித்த பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது இது ஒருபுறம் எனில் வீரமணி இந்த விவகாரத்தில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை எழுதி வைத்துள்ளாராம். அவரை கைது செய்த போது அவருடைய வீட்டில் இருந்து டைரியை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த டைரியை போலீசார் பார்த்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தன் மீது இந்த புகார் எழுந்தவுடன் தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யாமல் இருப்பதற்காக வீரமணி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வங்கி கணக்கு மூலம் எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுத்தார் என்ற விவரங்கள் பட்டியல் போடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவிர்த்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் வீரமணி கோடிக்கணக்கில் பணம் தந்துள்ளாராம். இதற்காக அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஊட்டியில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்து ரூ.70 கோடியை போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தாராம். வீரமணியுடன் பெரிய ரெயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவரின் மகன் நெருங்கிய தொடர்பில் இருந்தாக சொல்கிறார்கள். அவர் மூலமாகதான் இந்த பணம் கைமாறியதாக தெரிகிறது. எனவே அவரையும் இந்த விசாரணை வளையத்துக்குள் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணை அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரையில் அடுத்தடுத்து சிக்குவார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் எவ்வளவு பெரிய உயர் அதிகாரிகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்களாக இருந்தாலும் மாட்டுவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்துத் தமிழக அரசு பரிசீலிக்கும் என்றே தெரிகிறது. ஏனெனில் மாநிலக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் உட்பட சிலர் பணம் வாங்கி கொண்டு, எப்ஐஆரில் ஜெம் வீரமணி பெயரை சேர்க்காமல் விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே காவல்துறையினரே விசாரிப்பது பெரும்பாலும் சமரசங்களுக்கு வழிவகுக்கக்கூடும். ஒருவேளை அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் விசாரணை நடைபெறுவதால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இவ்வழக்கை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது.