நாட்டிலேயே அதிக வீடுகள் விற்பனை.. பெங்களூர் முதலிடம்.. சென்னையில் நடந்த அசுர வளர்ச்சி

  • சென்னை: வீடுகள் விற்பனை என்பது இந்தியாவிலேயே அதிகம் என்றால் அது பெங்களூர் தான். நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் 21,516 வீடுகள் விற்பனையாகி உள்ளது. பெங்களூருவுக்கு அடுத்து ஹைதராபாத் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மும்பை உள்ளது. அடுத்தபடியாக டெல்லி உள்ளது. சென்னைக்கு 5 ஆம் இடம் கிடைத்துள்ளது.

    Advertisement

    பொதுவாக உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. அதேபோல் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. மக்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமங்களை சந்தித்தனர்.

    Advertisement

    ஐடி தொழில்களும் வேலை எப்போது போகும் என்று தெரியாத அளவிற்கு பணி நீக்கமும் நடந்தது. யாருக்கும் பெரிய அளவில் வருமானம் உயரவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலும், இந்தியாவில் வீடுகளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவின் 9 முக்கிய பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், வீடுகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'பிராபிக்விட்டி' நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 458 வீடுகள் விற்பனை ஆகியுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 94 ஆயிரத்து 864 வீடுகள் மட்டுமே விற்பனை ஆகியிருந்து. பல்வேறு சிக்கல்களுக்கு நடுவிலும் இந்த ஆண்டு விற்பனை 19 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதேபோல், புதிய வீட்டுத் திட்டங்களின் அறிமுகமும் 43 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 609 புதிய வீடுகள் சந்தைக்கு வந்திருப்பதாகவும் 'பிராபிக்விட்டி' நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

    Advertisement


    பெங்களூர் முதலிடம்

    நாட்டிலேயே தென்னிந்தியாவில் உள்ள நகரங்களில் தான் வீடுகளின் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு 21,516 வீடுகள் விற்பனையுடன் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐதராபாத் 14,410 வீடுகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை 10,561 வீடுகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.அங்கு வீடுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. அதேநேரம் தலைநகர் டெல்லியில் விற்பனை சற்றே மந்தமாக காணப்படுகிறது. டெல்லியில் வீடு விற்பனை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 11,703-ல் இருந்து 10,082 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் வீடுகள் விற்பனையில் டெல்லி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

    Advertisement

    English Summary

    Bengaluru leads India in home sales. In the quarter spanning April to June of this year alone, 21,516 homes were sold in the city. Hyderabad ranks second, followed by Mumbai and then Delhi. Chennai holds the fifth position.