இரு மொழிக்கொள்கையை கைவிட்ட தவெக அரசு? இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? வேடிக்கை பார்க்கும் விஜய்

  • சென்னை: தமிழ்நாடு அரசு இணைய பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் தற்போது இந்தி மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை கைவிடப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    தமிழகத்தில் இருமொழிக்கொள்கைக்கு பின்னால் மிகப்பெரிய போராட்டமும், தியாகமும் இருக்கிறது. ஆனால், மும்மொழிக்கொள்கை.. குறிப்பாக இந்தியை உள்ளே கொண்டுவர வேண்டும் என்பது RSS/பாஜகவின் நீண்ட நாள் பிளான். இப்படி இருக்கையில், தற்போது தமிழக அரசின் வெப்சைட்டில் இந்தி மொழி இணைக்கப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    திமுகவின் டாக்டர் எழிலன் தனது x பக்கத்தில் இது குறித்த படங்களை பகிர்ந்து, "தவெக அரசு... தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ? தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ? Tvk government implementing Three language policy - in govt administration... 'Arignar anna' policy in dust bin Rss agenda in front seat" என பதிவிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. கடந்த திமுக ஆட்சியிலும் இந்தி மொழி திணிப்பு நடந்தது. குறிப்பாக ரயில் நிலையங்களில் கடந்த காலங்களில் முதலில் தமிழ் எழுத்தும், அடுத்து ஆங்கிலமும், கடைசியாக இந்தியும் இருக்கும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் முதலில் தமிழிலும், அடுத்து பிரதானமாக இந்தியிலும் கடைசியாக ஆங்கிலத்திலும் பெயர்கள் மாற்றி எழுதப்பட்டன.

    Advertisement

    இது மட்டுமல்லாது தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் திடீரென இந்தி மொழி முளைத்தது. வெளியில் பிரதானமாக வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகள் இந்தி மொழியில் வைக்கப்பட்டன. குறிப்பாக திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் 'கர்தவ்ய த்வார்' என்று எழுதப்பட்டிருந்தது. இப்படி எழுதப்பட்டதால்.. அதன் அர்த்தம் என்ன என்று தமிழர்களுக்கும் தெரியாது.. இந்தி தெரிந்தவர்களும் இது என்னவென்று தெரியாது.

    கேட்டால்.. அம்ரித் பார்த் நிலைய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், பூங்கா, திருச்சி, தஞ்சாவூர் என சுமார் 75 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையங்களில் எல்லாம் இந்தியை பிரதானமாக்க உத்தரவு வந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரயில் நிலையங்களில் பெயர் மாற்றம் செய்ததன் தொடர்ச்சியாக.. தற்போது தமிழக அரசின் வெப்சைட்டிலும் இந்தி இடம்பெற்றிருப்பது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. ஏன் தமிழக அரசு இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை? முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு இந்த விஷயம் போகவில்லை? அல்லது போன பின்னரும் மௌனம் காக்கிறாரா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

    English Summary

    Hindi Added to Tamil Nadu Government Website: The Hindi language has now been added to the Tamil Nadu government’s website, alongside Tamil and English. This has raised the question: has the two-language policy in Tamil Nadu been abandoned?