விஜய்யின் மசநீவெகூ! #இந்துமதச்சார்பற்றசமூகஅநீதிவெற்றிக்கூட்டணி தான் கரெக்ட்..ராம.ரவிக்குமார் அட்டாக்

  • சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிற இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதோடு, கூட்டணிக்கு மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், ஒரு மதத்தின் அடையாளங்களுக்கு மட்டும் தனிச்சலுகை வழங்கிவிட்டு, மற்றொரு மதத்தின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை புறக்கணித்துக்கொண்டு "மதச்சார்பற்ற சமூக நீதி" என்று பேசுவது உண்மையான மதச்சார்பின்மை அல்ல என இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.

    Advertisement

    சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு தமிழக வெற்றி கழக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், அந்த கூட்டணி தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஒரு மதத்தின் அடையாளங்களுக்கு மட்டும் தனிச்சலுகை வழங்கிவிட்டு, மற்றொரு மதத்தின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை புறக்கணித்துக்கொண்டு "மதச்சார்பற்ற சமூக நீதி" என்று பேசுவது உண்மையான மதச்சார்பின்மை அல்ல என விமர்சித்துள்ளார் இந்து தமிழர் கட்சியின் நிறுவனரான ராம.ரவிக்குமார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி" என்று பெயர் வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, மற்றொரு மதத்தினரை திருப்திப்படுத்தும் வகையில் அதிகாரங்களையும் சலுகைகளையும் வழங்குவது உண்மையான மதச்சார்பின்மையா? சமூக நீதியா? அனைத்து மதங்களையும் சமமாகப் பார்ப்பதே உண்மையான மதச்சார்பின்மை. அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் வழங்கப்படுவதே உண்மையான சமூக நீதி.

    Advertisement

    ஆனால், ஒரு மதத்தின் அடையாளங்களுக்கு மட்டும் தனிச்சலுகை வழங்கிவிட்டு, மற்றொரு மதத்தின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை புறக்கணித்துக்கொண்டு "மதச்சார்பற்ற சமூக நீதி" என்று பேசுவது உண்மையான மதச்சார்பின்மை அல்ல; அது பொய்மை வாதம். எனவே, இவர்களின் செயல்பாடுகளையும் அணுகுமுறையையும் பார்க்கும்போது, இந்தக் கூட்டணிக்கு #இந்துமதச்சார்பற்றசமூகஅநீதிவெற்றிக்கூட்டணி என்ற பெயரே சாலப் பொருத்தமானதாக இருக்கும்!" என கூறியுள்ளார்.

    English Summary

    Hindu Tamilar Katchi leader Ram Ravikumar criticises TVK’s alliance name, questioning its claims of secularism and social justice.