விஜய்க்கு புது நெருக்கடி.. உக்கிரமடையும் கூட்டணி கட்சிகள்! என்ன செய்யப்போகிறார் முதல்வர்?

  • சென்னை: ஆணவ கொலை வழக்கில் தவெக நிர்வாகி சிக்கியிருப்பது.. ஆணவக்கொலைக்கு எதிரான குரல்களை தீவிரமடைய செய்திருக்கிறது. இதை தடுக்க தனி சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கையை ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் தீவிரமாக முன்வைத்திருக்கின்றனர். இந்த நெருக்கடியை விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    சென்னையை அடுத்த தையூர் பகுதியில் ஆக.15 அன்று கொடூர சம்பவம் நடந்தது. மொத்த நாடும் சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில், பிரவீன் என்கிற 22 வயது இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    என்ன நடந்தது?

    தையூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (22), இவர் இதே பகுதியை சேர்ந்த ஏழுமலை எனும் தவெக நிர்வாகியின் மகளை காதலித்து வந்திருக்கிறார். காதல் விவகாரம் ஏழுமலைக்கு தெரிய வந்திருக்கிறது. பிரவீனும், ஏழுமலையும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும்.. பொருளாதார ரீதியில் பிரவீன் குடும்பம் சற்று பின் தங்கியிருக்கிறது. எனவே, ஏழுமலை இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காதலை கைவிட வேண்டும் என்றும் வார்னிங் செய்திருக்கிறார்.

    சுதந்திர தினத்தில் கொடூரம்

    ஆனால், பிரவீன் காதலை கைவிடவில்லை. எனவே ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன ஏழுமலை, இப்படி ஒரு பையனுக்கு என் பொண்ணை கட்டி கொடுத்தா குடும்ப கவுரவம்(?) என்னத்துக்கு ஆகுறது.. அதனால குத்தி போட்டுடுவோம் என்று தனது மகன் கவுதமிடம் பேசி.. கூலிக்காக கொலை செய்யும் நபர்களுக்கு பணம் கொடுத்து பிரவீனை தாக்க சொல்லியிருக்கிறார். இப்படித்தான் ஆக.15ம் தேதியன்று பிரவீன் தாக்கப்பட்டார்.

    Advertisement

    உண்மையான பிரச்சனை

    தாக்கப்பட்ட பிரவின் நேற்று உயிரிழந்திருந்தார். உண்மையான பிரச்சனையே இங்குதான் தொடங்கியுள்ளது. ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். ஆனால் மறுபுறம் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே ஆணவக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்படியெனில் ஆணவக்கொலைகளை கட்சி ஆதரிக்கிறதா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

    தனிச்சட்டம்

    ஆணவ கொலை சம்பவம், தவெகவுக்கு ஆதரவளித்த இடதுசாரி கட்சிகளை டென்ஷனாக்கியிருக்கிறது. கடந்த ஆட்சியில் திமுக உடன் பயனித்தபோதும் ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று இடதுசாரிகள் கேட்டிருந்தனர். அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் தற்போது இதே கோரிக்கையை தீவிரமாக எழுப்ப தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    விஜய்க்கு நெருக்கடி

    மறுபுறம் தலித் அமைப்புகளுடம் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கின்றன. ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை விஜய் நிறைவேற்றுவாரா? அல்லது கிடப்பில் போடுவாரா? என கேள்வி எழுந்திருக்கிறது. அப்படி போட்டால் இடதுசாரிகளும், தலித் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சும்மா இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Honor killing bill demand: The involvement of Daveka administrator in the manslaughter case has intensified the voices against the manslaughter. The leftists in the ruling party alliance have seriously put forward the demand for a separate law to prevent this. The question arises as to how Vijay is going to deal with this crisis.