திருவள்ளூர் அருகே பயங்கரம்.. அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

  • சென்னை: திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திறுள்ளேயே பெண் ஊழியர் மீது தீ வைத்துவிட்டு தப்பி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 50 சதவீத தீக்காயம் அடைந்த பெண் ஊழியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தற்காலிக ஊழியர் ராஜேஸ்வரி என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். தீ வைக்கப்பட்டதால் படுகாயம் அடைந்த பெண் ஊழியர் ராஜேஸ்வரியை அங்கு இருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    Advertisement

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ராஜேஸ்வரி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். 60 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ள ராஜேஸ்வரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியர் தீ வைத்து தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பெண் ஊழியர் ராஜேஸ்வரி மீது தீ வைத்த நபர் யார்? என்ன காரணத்திற்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்? தனிப்பட்ட பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    English Summary

    Tiruvallur: An incident where a female employee was doused with petrol and set ablaze at the Ponneri Government Hospital in Tiruvallur has caused a major stir. Police are searching for the individual who set the woman on fire within the hospital premises and subsequently fled. The employee, who sustained 50 percent burns, has been admitted to the government hospital.