தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம் புகார்! மதுரை அதிமுக பிரகமுரிடம் விசாரனை! மீண்டும் கைதா?

  • சென்னை: தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர் பிஎம் மன்னனிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. மன்னன் மீது இரண்டு பிடிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏவாக இருப்பவர் மதார் பதூருதீன். முஸ்தபா என்று அழைக்கப்படக்கூடிய இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அளித்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

    Advertisement

    முஸ்தபா கூறுகையில், திமுக மற்றும் அதிமுக மீண்டும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனக்கும் போன் செய்து முதற்கட்டமாக ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வருவோம். அப்போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறி மதுரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் என்னிடம் பேசினார். என்னிடம் குதிரை பேரம் பேசியவர் குறித்த விவரம் விரைவில் வெளிவரும்" என்று கூறியிருந்தார்.

    ரூ.30 கோடி குதிரை பேர புகார்.. கைதான மதுரை அதிமுக நிர்வாகி மன்னனை விடுவிக்க கோர்ட் அதிரடி உத்தரவு
    Advertisement

    இந்த நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா தரப்பில் மதுரை மத்திய குற்றத்தடுப்பு போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அ.தி.மு.க. பிரமுகருமான பி.எம். மன்னன் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    7 மணி நேர விசாரணைக்கு பிறகு ஆஜர்படுத்தப்பட்ட பி.எம். மன்னனை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இன்று சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பி.எம்.மன்னனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன்படி இன்று பிஎம் மன்னன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் விசரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Advertisement

    மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு அதிமுக பிரமுகர் மன்னன் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்படுவாரா? அல்லது விடுதலை செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

    4ம் தர அரசியல்வாதி போல்.. மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அரசியல் செய்கிறார் விஜய்.. கேபி முனுசாமி!

    முன்னதாக மன்னன் கைது சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கணடனம் தெரிவித்து இருந்தார். பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை தவெக எடுத்துள்ளது என்ற விமர்சனம் அதிமுக தரப்பில் இருந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் மன்னனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    English Summary

    Horse trading complaint: Allegations have emerged that a deal worth Rs. 30 crore was proposed to TVK MLA Mustafa to induce him to vote against the TVK government. In connection with this matter, AIADMK figure PM Mannan is being questioned for the second consecutive day today. A case has been registered against Mannan under two sections of the law.