குதிரை பேரமா? ஒட்டக பேரமா? செய்தியாளர்களிடம் வைகோ கடும் வாக்குவாதம்!

  • சென்னை: மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய மறுத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, இது "குதிரை பேரமா? ஒட்டக பேரமா?" என்று ஆவேசமாக எதிர்கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவில் இணைந்த முன்னாள் மதிமுக எம்எல்ஏவை சுட்டிக்காட்டிய அவர், திமுகவுக்கு ஆதரவாக கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் காட்டமாக தெரிவித்தார்.

    Advertisement

    திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிவிட்டதாக வைகோ இன்று அறிவித்தார். வரும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் வைகோ தனது பேட்டியில் கூறினார். வைகோ தனது பேட்டியின் போது இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய மறுத்தது தொடர்பாக ஆவேசமாக பேசினார். வைகோ கூறியதாவது:-

    Advertisement

    குதிரை பேரமா? ஒட்டக பேரமா?

    இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய சொல்வது சரியான முடிவா? குதிரை பேரத்தில் வராதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ, ஒன்னும் தப்பு கிடையாது. குதிரை பேரம் யாரு செய்வது. எந்த கட்சி நடத்துகிறது? குதிரை பேரம் பண்ணித்தான் இப்போ ஒரு எம்.எல்.ஏவை அவர்கள் வெளியே கொண்டு போயிருக்கிறார்களா? குதிரை பேரமா? ஒட்டக பேரமா?

    நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் (செய்தியாளர்) பதில் சொல்லுங்க.. செந்தில் செல்வனை கொண்டு போயிருக்காங்க. இது குதிரை பேரமா? ஒட்டக பேரமா? செந்தில் செல்வன் திமுகவில் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார். திமுகவிற்கு வக்காலத்து வாங்கும் கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" எனவும் மிகவும் காட்டமாக பேசினார். தொடர்ந்து வைகோ கூறியதாவது:-

    Advertisement

    விசிக அவங்க சின்னத்தில் போட்டியிட்டாங்க

    ஒரு சீட்டில் நிற்க வேண்டும் என்று, அதிலும் திமுக சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். அது என்ன மாதிரியான அரசியல். மற்ற கட்சிகளை நிர்பந்திக்கவில்லையே. விசிக அவர்கள் சின்னத்தில் போட்டியிட்டார்கள். கம்யூனிஸ்ட்கள் அவர்கள் சின்னத்தில் போட்டியிட்டார்கள். எங்களை மட்டும் ஏன் நிர்பந்தித்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தால் வைகோவுக்கு இதே வேலை என்று என் மேலே பாய்வதற்கு ஊடகங்கள் தயாராக காத்துக்கொண்டு இருந்தன.

    அதனால்தான் நான் இதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். திமுக எங்களை சரியாக நடத்தவில்லை. போனாவுடன் இந்த 4 சீட்டிற்கு ஒப்புக்கொண்டால்தான் அடுத்து பேச்சுவார்த்தை.. என்று கண்டிஷன் பொட்டு நிர்பந்தப்படுத்தி அடுத்த நகர்வுக்கு போக முடியும். அப்போதுதான் பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள்.

    Advertisement

    திமுக கூட்டணியில் இருந்த போது, கூட்டணி தர்மத்திற்காக நான் சில தவறுகளை உணர்ந்தாலும், விமர்சனம் செய்யாமல் இருந்தேன். ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயாணா தமிழக அரசின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

    English Summary

    Horse Trading: MDMK general secretary Vaiko engaged in a heated argument with reporters over questions on MLAs refusing to resign. Rejecting allegations of political horse-trading, he questioned whether an MLA's move to the DMK should be called horse trading or camel trading.