வெறும் ரூ.1 லட்சம்தான் மூலதனம்.. ஆனால் ரூ.10,000 கோடி முதலீடு! எப்படி திமிங்கலம்? சாட்டை நறுக் கேள்வி

  • சென்னை: இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டுக்கு, ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், முதலீடு செய்ய உள்ள பல நிறுவனங்கள் குறித்து சந்தேகங்கள் இருப்பதாக.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, "திருச்செந்தூரில் ரூ.10,000 முதலீட்டில் டேட்டா சென்டர் அமைக்கப்போவதாக நிறுவனம் ஒன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

    Advertisement

    அந்த நிறுவனத்தின் பெயர் 'லைட் ஹவுஸ் கிரீன் டேட்டா சென்டர் பிரைவேட் லிமிட்டெட்'. தமிழகத்திற்கு குவிந்துள்ள ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில், இந்நிறுவனத்தின் முதலீடு மட்டும் ரூ.10,000 கோடி. இந்த டேட்டா சென்டர் நிறுவனம், ஆரம்பிக்கப்பட்டே வெறும் 4 மாதங்கள்தான் ஆகிறது. கடந்த பிப்ரவரி மாதம்தான் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. சரி தொடங்கி 4 மாதங்கள் மட்டுமே ஆன ஒரு நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யக்கூடாதா? என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. தாராளமாக முதலீடு செய்யலாம்.

    ஆனால் சில விஷயங்கள் இடிக்கிறது. இந்நிறுவனத்தின் ஷேர் கேப்பிட்டல்.. அதாவது மூலதனம் வெறும் ரூ.1 லட்சம்தான். இவ்வளவு குறைவான மூலதனம் கொண்ட நிறுவனம் ரூ.10,000 கோடியில் முதலீடு செய்வதாக தமிழக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. சரி இந்நிறுவனத்தின் மூல நிறுவனம் எது? என்று தேடினால்.. 'பின் காரிசன்' நிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம் என்று தெரிய வந்திருக்கிறது. இதன் இயக்குநர் வெங்கட்ராமன். இந்நிறுவனத்திற்கும் டேட்டா சென்டர் நிறுவனத்திற்கும் ஒரே இயக்குநர்தான்.

    Advertisement

    'பின் காரிசன்' கடந்த 2010லிருந்து செயல்பட்டு வருகிறது. மும்பையில் தலைமையகமும், பெங்களூரில், சென்னையில் கிளை இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய நிறுவனம், பெரிய அளவுக்கு வெற்றிப் பெற்ற நிறுவனம் கிடையாது. ஆக இப்படியாக வெறும் ரூ.1 லட்சம் மூலதனம் காட்டிய இந்த நிறுவனம்தான், ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக தெரிவித்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    ஆட்சிக்கு வந்து 100 நாட்களில்.. ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்திருக்கிறோம் என்று தவெக அரசு கூறி வரும் நிலையில், சாட்டை துரைமுருகனின் கேள்வி விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

    English Summary

    Saattai Duraimurugan: The Tamil Nadu government has announced that investments exceeding ₹1 lakh crore have been attracted to the state during the investors' conference held today. However, Saattai Duraimurugan, an office-bearer of the Naam Tamilar Katchi, has raised questions, expressing doubts regarding several of the companies intending to invest.Saattai Duraimurugan: The Tamil Nadu government has announced that investments exceeding ₹1 lakh crore have been attracted to the state during the investors' conference held today. However, Saattai Duraimurugan, an office-bearer of the Naam Tamilar Katchi, has raised questions, expressing doubts regarding several of the companies intending to invest.