கூட்டுறவு வங்கிகள் வாரம் தோறும் தரும் கடன் உதவி.. எளிய மக்கள் எப்படி பெறுவது? தமிழக அரசு விளக்கம்

  • சென்னை: தமிழ்நாட்டில் வாரந்தோறும் வீட்டுக் கடன், விவசாய கடன், வாகன கடன், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கடன் வழங்க மெகா கடன் மேளாக்களை கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனம் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் மகளிர், வீட்டு வசதிக் கடன் முகாம்கள் நடைபெற இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைக் கடன் முகாம்கள் நடைபெற உள்ளது. கடன் முகாம்களில் தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடுஅரசின் கூட்டுறவு துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில்," தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடப்பாண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்புக்கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன்படி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஆதிதிராவிடர்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும் வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக்கடன்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

    இச்சிறப்பு முகாம்களில் நடுத்தர கால விவசாயக் கடன்கள், வர்த்தகத் தொழில் கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், ஆதரவற்றோர்களுக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத் துறைக்கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காலை உணவு திட்டத்தில் அதிரடி முடிவு.. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு எதிர்ப்பு
    Advertisement

    இக்கடன் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக்கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    மக்கள் கவனிக்க வேண்டியவை

    பொதுவாக தாட்கோ மூலம் வழங்கப்படும் பல சுயதொழில் கடன்களுக்கு அரசு 35% முதல் 50% வரை மானியம் வழங்குவதுடன், தொழில்முனைவோருக்கு 6% வட்டி வழங்கப்படுவது உண்டு. இந்த கடன் பெற வெள்ளிக்கிழமை முகாம்களில் பங்கேற்க வேண்டும். வீட்டு வசதிக் கடனை பொறுத்தவரை கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வட்டி விகிதம் ஆண்டிற்கு சுமார் 8.25% முதல் 9.50% வரை வசூலிக்கப்படுவது உண்டு. உங்கள் சிபிலை பொறுத்து மாறும். நடுத்தர கால விவசாயம் & வணிகக் கடன்களை பொறுத்தவரை ஆண்டிற்குச் சுமார் 10.80% முதல் 12% வரை வட்டி இருக்கும். அதே போல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கான கடன்களைப் பொறுத்தவரை மிகவும் குறைந்த மற்றும் எளிய வட்டி விகிதத்திலேயே கடன்கள் வாங்க முடியும். தனியார் பைனான்ஸ்களில் கடன் வாங்குவதைவிட இதில் கடன் வாங்கினால் மிகப்பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கும்.

    Advertisement
    முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்கு பதிலாகப் புடவையை போர்த்தினாரா நயினார்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

    தங்க நகைக்கடன்

    முன்னதாக கடந்த வாரம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில் " கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும். அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், கூட்டுறவு சங்கக் கிளைகளில் வழங்கப்படும் நகைக்கடன் வட்டியை விட 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இனி புதிதாக வழங்கப்படும் மற்றும் தற்போது புதுப்பிக்கப்படும் நகைக்கடன்களுக்கு மட்டுமே இது பொருந்தும்" என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    How can ordinary people avail themselves of the weekly loan assistance provided by cooperative banks? Tamil Nadu government clarifies.