அம்பத்தூர் 'கண்ணன்'.. 15 பெண்களை வலையில் வீழ்த்தி ஏமாற்றியவர்.. மலேசியப் பெண்ணிடம் சிக்கியது எப்படி?

  • சென்னை: திருமண இணையதளங்களில் விவாகரத்தான பெண்களைக் குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருமண ஆசை காட்டி 15-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிச் சீரழித்த மோசடி மன்னன் மீது மலேசியப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கோவையைச் சேர்ந்த அப்பெண் வருங்காலக் கணவரைச் சந்திக்க லாட்ஜிற்குச் சென்றபோது, அவரது செல்போனில் தற்செயலாகப் பார்த்த வீடியோக்களால் இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது.

    Advertisement

    சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வருகிறார். திருமணமான இவர், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக ஆன்லைன் திருமண இணையதளத்தில் 'மணப்பெண் தேவை' எனப் பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்து, முதல் திருமணத்தில் தோல்வியடைந்து விவாகரத்து பெற்ற ஏராளமான இளம்பெண்கள் இவரைத் தொடர்புகொண்டுள்ளனர்.

    Advertisement

    அவ்வாறு தொடர்புகொண்ட இளம்பெண்களிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களைத் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துவிட்டு, பின்னர் கம்பி நீட்டிவிடுவார். இவரது ஆசை வலையில் சிக்கி 15 இளம்பெண்கள் வரை சீரழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், பயத்தின் காரணமாக இதுவரை யாரும் இவர் மீது புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கண்ணனுக்கு எதிராக மலேசியாவில் வசிக்கும் பெண் ஒருவர் தற்போது புகார் அளித்துள்ளார். சென்னை மகளிர் ஆணையத்தில் அவர் அளித்த பரபரப்புப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    Advertisement

    "எனது சொந்த ஊர் கோவை. முதல் கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டதால், 2-வது திருமணத்திற்காக முயற்சி செய்து வந்தேன். மலேசியாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். அப்போது திருமண இணையதளம் ஒன்றில் கண்ணனின் சுயவிவரத்தைப் (Profile) பார்த்து அவரைத் தொடர்புகொண்டேன். ஆரம்பத்தில் செல்போன் மூலம் பேசி வந்தோம். அவர் என்னை திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தார்.

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு வருமாறு அழைத்ததன் பேரில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து நான் அவரைச் சந்தித்தேன். வருங்காலக் கணவராக பாவித்து அவரது இச்சைக்கு இணங்கினேன். இதுபோல மலேசியாவில் இருந்து பலமுறை சென்னைக்கு வந்து அவரோடு லாட்ஜில் தனியாகத் தங்கினேன். என்னிடம் இருந்து நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போனைத் திருமணப் பரிசாகக் கேட்டு வாங்கினார். மேலும் ரூ. 11 லட்சம் ரொக்கப் பணத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    Advertisement

    அண்மையில் நாங்கள் புரசைவாக்கம் லாட்ஜில் தனிமையில் இருந்தபோது அவரது செல்போனைத் தற்செயலாகப் பார்த்தேன். அதில் அவர் ஏராளமான பெண்களோடு ஆபாச நிலையில் இருக்கும் வீடியோக்கள் இருந்தன. என்னைப்போல பல இளம்பெண்களை ஆசை வலையில் வீழ்த்திச் சீரழித்தது தெரியவந்தது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறப்பட்ட அந்தப் புகார் மனு, வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு அனுப்பப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கண்ணனால் ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை, புதுக்கோட்டை, பெங்களூரு, மதுரை, மும்பை, சேலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றும்; கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் பெண்களும் இப்பட்டியலில் இருப்பதாக மலேசியப் பெண் தெரிவித்துள்ளார். எனினும் தன் மீதான புகாரைக் கண்ணன் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். முழுமையான விசாரணைக்குப் பின்னரே கண்ணன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    English Summary

    Incidents of fraud targeting divorced women on matrimonial websites have increased. A Malaysian woman has lodged a complaint against a serial fraudster who exploited more than 15 young women by promising marriage. The complainant is a woman from Coimbatore who resides in Malaysia.