தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.. பைபிள் வசனத்தை மறந்த மரிய வில்சன்!

  • சென்னை: "சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்" என்கிறது பைபிளின் நீதிமொழிகள் 10:19. ஆனால் பிறப்பாலேயே தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், பைபிளை படித்து வளர்ந்தவர் என்றும் சட்டசபையில் உரக்கத் தெரிவித்த நிதியமைச்சர் மரிய வில்சன், இந்த நீதிமொழியை படித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழ் உச்சரிப்பை சற்று சரி செய்துகொள்ளுங்கள் என்று கண்ணியமாக எடுத்துச் சொன்ன மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனிடம், அமைச்சர் மரிய வில்சன் வெளிப்படுத்திய உடல்மொழியும், அவர் பேசிய விதமும், மைக்கை ஓங்கி மேஜையில் அடிக்கும்படி வைத்து அமர்ந்ததும் பைபிளை படித்தவர் என்ற அவரது பேச்சுக்கே முரணாக மாறியதுதான் விந்தை.

    Advertisement

    எத்தனை தமிழ் படித்தாலும் பிறவி கிறிஸ்தவரான தனது மதம் கற்றுக்கொடுத்த அன்பின் மொழியை புரிந்து கொள்ள முடியாது என்று அவர் பேசியதுதான் இதில் உச்சகட்ட அதிர்ச்சி. சம்மந்தமே இல்லாமல், மதத்தை இழுத்துக் கொண்டு வந்து மரிய வில்சன் பேசிய அவசியம் என்ன.. எம்எல்ஏ ராஜேந்திரன், எந்த மதத்தையும் குறிப்பிட்டு பேசாத நிலையிலும், இதற்கான தேவை எங்கிருந்து வந்தது என்ற கேள்வி தமிழக மக்களின் தலைகளுக்குள் குடைந்து கொண்டிருக்கிறது.

    கிறிஸ்தவம் அன்பை போதிக்கிறது, தமிழ் படித்தவர்களுக்கு அது புரியாது என்ற வார்த்தை பல பொருள் தரவல்லது. கிறிஸ்தவர்கள், தமிழர்கள் இல்லை, அவர்கள் வெளிநாட்டினருக்குதான் ஆதரவாக இருப்பார்கள் என்று பாஜக செய்து வரும் பிரச்சாரத்திற்கு தீனிபோடத் தக்கது. இன்னொரு கோணத்தில் பார்த்தால், தமிழர்கள் அன்பில்லாதவர்கள் என்ற அர்த்தத்தையும் தருகிறது அவரது ஆவேச பேச்சு.

    Advertisement

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும், என்ற திருக்குறள் கொண்ட மொழி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பெருமகனார் உதிர்த்த தமிழ் மொழி, சில தலைமுறைக்கு முன்பாக கன்வெர்ட் ஆன மரிய வில்சனின் குடும்பம் போல் அல்லாமல், பரம்பரை ஒரிஜினல் கிறிஸ்தவரான ஜி.யூ.போப் கனடாவில் பிறந்தவரானாலும் திருக்குறள், திருவாசகம் மற்றும் நாலடியார் போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வைத்து சேவை செய்ய வைத்த தமிழ் எப்படி அன்பில்லாத மொழியானது.

    கான்சுடண்டைன் சோசப்பு பெசுக்கி (Constantine Joseph Beschi) என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரிஜினல் கிறிஸ்தவரான ஜோசப் பெஸ்கி, கிறித்தவ சமயப் பரப்புப் பணிக்காகத் தமிழகம் வந்து, தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை 'வீரமாமுனிவர்' என்று மாற்றிக் கொண்ட வரலாறை அறியாமலா கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் மரிய வில்சன் என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழுகிறது.

    Advertisement

    கிறிஸ்தவமும் காதல் செய்த மொழியல்லவா, செம்மொழியான நமது தமிழ் மொழி. அன்புக்கு பாத்திரமான கிறிஸ்தவம்தான் என்று அடித்துச் சொல்லும் மரிய வில்சன், அந்த கிறிஸ்தவர்களையே ஈர்த்த தமிழை தாழ்த்தி பேசியது தகுமா?

    மொழியோடு மட்டும் மோதலை ஏற்படுத்தவில்லை மரிய வில்சன், போகிற போக்கில் கிறிஸ்தவம்தான் அன்பின் மொழி என்ற அர்த்தத்தையும் உதிர்த்துப்போய்விட்டதால், இந்து மதமும், இஸ்லாமும், பவுத்தமும், சமணமும், சீக்கியமும் இன்ன பிற மதங்களும் அன்பில்லாதவை என்ற தொனியையும் சேர்ந்தே விதைத்துள்ளார் மரிய வில்சன்.

    நிஜமாகவே இவர் அன்பானவர் என்றால் உருட்டுக் கட்டையுடன் உடன் பிறந்தவர் வீட்டுக்குள் நுழைந்த வழக்கு இன்னும் நடக்கிறதே என்ற கேள்வியை எழுப்புவோர் ஒருபக்கம், தாய்மொழியை தாழ்த்தி பேசுவதா என கொந்தளிப்போர் இன்னொருபக்கம் என தேவையற்ற சர்ச்சையை எழுப்பிவிட்டு பகிரங்க மன்னிப்பும் கேட்காமல் இருக்கும், மரிய வில்சனை கண்டிப்பாரா முதல்வர் விஜய்?

    English Summary

    Tamil Nadu Finance Minister Maria Wilson sparked controversy by comparing Tamil with Christianity.