ஜெம் வீரமணியின் வீடியோ போலீசாரிடம் சிக்கியது எப்படி? சத்தமே இல்லாமல் சாந்தி செய்த வேலை என்ன?

  • சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் சிக்கிய ஜெம் வீரமணியின் வீடியோ எப்படி போலீசாருக்கு கிடைத்து என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெம் வீரமணி தொடர்பான பென்டிரைவ் போலீசிடம் சிக்கியிருந்தது. அந்த பென் டிரைவின் அடிப்படையில் தான் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி மற்றும் கேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பென் டிரைவ் எப்படி போலீசுக்கு சென்றது.. அதன் பின்னணியில் இருந்தார்கள். அந்த வீடியோவை யார் பதிவு செய்தார்கள்.. எதற்காக பதிவு செய்தார்கள். அந்த அடையாளம் தெரியாத நபர் என்ற பல்வேறு கேள்விகள் உள்ளன.

    Advertisement

    போலீசாருக்கு கிடைத்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.அதன்படி, இந்த பென் டிரைவ்வை சாந்தி அணுகியதாக கூறப்படுகிறது. முக்கியமான இந்த விவகாரத்தில் தேனாம்பேட்டையில் ஜெம் வீரமணி சொகுசு பங்களாக்களை வாங்கியிருந்தாராம். அந்த பங்களாவை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்காகவே வாங்கியிருந்தாராம் ஜெம் வீரமணி. அந்த சொகுசு பங்களாவை வாங்குவதற்கு முன்பு இருந்தே சாந்தியும், சாந்தியின் கணவர் மகேந்திர சிம்கனும் வீரமணிக்கு நெருக்கமாக இருந்துள்ளார்கள். ஏழை, எளிய சிறுமிகளை டார்கெட் செய்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தாராம் ஜெம் வீரமணி.அவருக்கு பக்கபலமாக சாந்தியும் மகேந்திர சிம்கனும் இருந்தார்களாம். வீரமணி குறிப்பிட்ட சொகுசு பங்களாவை வாங்கிய நிலையில், அதில் அடிக்கடி வந்து போவது கூட அக்கம் பக்கத்தினருக்கு தெரியாதாம்.

    Advertisement

    ஏனெனில் அங்கு நேரில் சென்று விசாரித்த போது வீரமணி என்றால் யார் என்றே தெரியவில்லை.. அந்தஅளவிற்கு ரகசியமாகவே வந்து சென்றுள்ளார். அந்த வீட்டை பராமரிப்பதற்கு மட்டுமல்லாமல், வீரமணியின் கொடூரங்களுக்கும் சாந்தி, மகேந்திர சிம்கன் தம்பதி உடந்தையாகவே இருந்தார்களாம். பல ஆண்டுகளாக சாந்தி, ஏழை, எளிய சிறுமிகளை டார்கெட் செய்து சிறுமிகளை வீரமணிக்கு அழைத்து வரும் இடைத்தரகராக இருந்து வந்தாராம். ஒரு கட்டத்தில் வீரமணிக்கும் சாந்திக்கும் பணத்தகராறு இருவருக்கும் ஏற்பட்டுள்ளதாம். சிறுமிகளுக்கு வீரமணி கொடுத்த பணத்தை சாந்தி சிறுமிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றினாராம்.

    இதை சிறுமிகள் வீரமணியிடம் கூறியுள்ளார்கள்.இதனால் நான் கொடுத்த பணத்தை சிறுமிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று சாந்தியிடம் கேள்வி எழுப்பினாராம். ஒரு கட்டத்தில் சாந்தி வீரமணி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி, தேனாம்பேட்டை பங்களாவில் சிறுமியுடன் வீரமணி இருக்கும் போது, அதை வீடியோவாக எடுத்துள்ளாராம்.இந்த விவகாரம் வீரமணிக்கு தெரியாதாம். அதன்பிறகும் பல ஆண்டுகளாக பணத்தகராறு என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருந்ததாம்..

    Advertisement

    எனினும் சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய இருவருமே அதே பங்களாவில் தான் இருந்துள்ளார்களார்கள். கொடுமைகளும் அரங்கேறிக்கொண்டே இருந்துள்ளது. 2025ம் ஆண்டு இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் சாந்தி மற்றும் அவரது கணவன் மகேந்திர சிம்கன் ஆகியோரை வீட்டை விட்டு வெளியேறுமாறு தொழிலதிபர் ஜெம் வீரமணி வலியுறுத்தினாராம்.. அப்போது சுயரூபத்தை காட்டிய சாந்தி மற்றும் அவரது கணவர் ஆகியோர், எங்களை வீட்டை விட்டு வெளியேற்றினால், வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி வீரமணியை மிரட்டி உள்ளனர். 2019ல் எடுத்த வீடியாவை, 2025ல் காட்டி மிரட்டி உள்ளார்.

    Advertisement

    இந்த சூழலில் தான் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து 'பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாக கூறியுள்ளார் அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாக கூறினாராம். அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, வயதான நபர் ஒருவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது. இதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

    Advertisement

    வீடியோவில் இடம்பெற்றிருந்த முதியவர் பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதாகும் ஜெம் வீரமணி என்பது தெரிய வந்தது. இதையடுத்தே வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் வழக்குடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமீகள் வாக்குமூலம் தந்துள்ளார்களாம். பல தொழிலதிபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக பாதிக்​கப்​பட்ட சிறுமி ஒரு​வர் போலீ​ஸாரிடம் கூறினாராம். இதைத் ​தொடர்ந்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த வீரமணியை போலீ​ஸார் 3 நாள் காவலில்​ எடுத்​து தற்​போது விசா​ரித்​து வரு​கின்றனர்.

    Advertisement

    இதனிடையே 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. திமுக, தவெக ஆகிய இரு கட்சிகளுமே நடவடிக்கை எடுக்காது ஏன் என மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு சென்ற நிலையில், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    How did the video of granite industrialist Gem Veeramani fall into the hands of the police in 2025? Who was the unidentified person who provided the video? What was Shanthi's role?