அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் ‘அனிதா’ ஆனது எப்படி? வாழ்வையே மாற்றிய சீமான் மாமனார்! தாய்மாமன் சீர் இதற்கா?

  • சென்னை: தமிழக அரசியலில் தற்போதைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்படும் நபர் அனிதா ராதாகிருஷ்ணன். திமுக முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு பின்னர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் யார்? ராதாகிருஷ்ணன் என்ற அவரது பெயர் முன்னாள் அனிதா வந்தது எப்படி? சீமானுக்கும் அவருக்குமான தாய்மாமன் சீர் உறவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

    Advertisement

    தமிழக அரசியலில் பல தலைவர்வர்களை அவர்களது சொந்த ஊர், குடும்பப் பெயர் அல்லது பட்டப்பெயர் மூலமாக அடையாளப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல.. எடப்பாடி, நத்தம், திண்டுக்கல், வாழப்பாடி, ஆற்காடு என தங்கள் ஊர் பெயர்களை அடையாளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள் உள்ளனர்.

    Advertisement

    பிடிஆர், கேகேஎஸ்எஸ்ஆர் என இன்ஷியல் அடையாளத்தைக் கொண்ட பல தலைவர்களுமே உள்ளனர். ஆனால், முன்னாள் அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு "அனிதா" என்ற அடைமொழி எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.

    அனிதா ராதாகிருஷ்ணன்

    இன்று அனைவரும் "அனிதா ராதாகிருஷ்ணன்" என்று அழைக்கும் இந்தப் பெயருக்குப் பின்னால் அரசியல் காரணம் எதுவும் இல்லை. அவரது முதல் தொழில்தான் அந்தப் பெயரை அவருக்கு நிரந்தர அடையாளமாக மாற்றியது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு, மதுரை மேலமாசி வீதியில் "அனிதா மெட்டல்ஸ்" என்ற பெயரில் பாத்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார். அக்காலத்தில் மதுரையில் மிகவும் பிரபலமான வணிக நிறுவனங்களில் ஒன்றாக அந்தக் கடை வளர்ந்தது.

    Advertisement

    அனிதா மெட்டல்ஸ்

    வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் "அனிதா மெட்டல்ஸ் ராதாகிருஷ்ணன்" என்று ராதாகிருஷ்ணனை அழைக்கத் தொடங்கினர். நாளடைவில் அந்தப் பெயர் சுருங்கி "அனிதா ராதாகிருஷ்ணன்" என்றே நிலைத்துவிட்டது. இன்று வரை அந்த அடையாளமே அவரது அரசியல் வாழ்க்கையிலும் தொடர்கிறது.
    அந்தக் காலத்தில் மதுரை மேலமாசி வீதி என்பது மார்க்கெட் மட்டுமில்லை. தமிழக அரசிலை மாற்றிய கூட்டங்கள் நடக்கும் பொதுக்கூட்ட மைதானங்களில் ஒன்றாகவும் அது இருந்தது.

    மேலமாசி வீதி

    அங்கு அடிக்கடி அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், தலைவர்களின் பிரச்சாரங்கள் என நிகழ்ச்சிகள் எப்போது பரபரப்பாகவே இருக்கும் ஒரு இடமாக மேலமாசி வீதி இருந்தது. அப்படி கூட்டங்கள் நடக்கும் போது,
    தனது கடையில் இருந்தபடியே பல முக்கிய தலைவர்களின் பேச்சுகளை கேட்கும் வாய்ப்பு ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தது. அதுதான் அவருக்குள் அரசியலின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    காளிமுத்து

    குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் பேச்சும் அரசியல் செயல்பாடுகளும் ராதாகிருஷ்ணனை மிகவும் கவர்ந்தறது. காளிமுத்துவின் அரசியல் அணுகுமுறை, மேடைப் பேச்சு, தொண்டர்களுடன் பழகும் விதம் ஆகியவை அவரை ஈர்த்தன. பின்னர் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது. அந்த நட்புதான் ராதாகிருஷ்ணனை அரசியலுக்குள் அழைத்து வந்தது.

    திமுகவில் பயணம்

    காளிமுத்துவின் மூலம் "அனிதா மெட்டல்ஸ் ராதாகிருஷ்ணன்" அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் காலப்போக்கில் "அனிதா ராதாகிருஷ்ணன்" ஆனால். பின்னர் அரசியல் சூழல்கள் மாறிய நிலையில் திமுகவில் இணைந்து முக்கிய தலைவராக உருவெடுத்தார். ஆனாலும், பல ஆண்டுகள் கடந்த பிறகும் காளிமுத்து மீதான தனது மரியாதையை ராதாகிருஷ்ணன் மறக்கவில்லை என்பது தான் உண்மை

    Advertisement

    கயல்விழி

    இதற்கு என்பதற்கு சமீபத்திய ஒரு சம்பவம் உதாரணம். காளிமுத்துவின் மகளும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவியுமான கயல்விழி இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த போது, தூத்துக்குடி அண்ணாச்சிகள் தங்கள் தங்கைக்கு செய்வது போல பாரம்பரிய முறையில் "தாய் மாமன் சீர்" கொண்டு சென்றது. அரசியலில் தனித் தனிக் கட்சிகளில் இருந்தாலும், காளிமுத்துவுடனான உறவை மதிக்கும் அவரது குணம் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உண்டு.

    சாந்த குணம்

    அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி அதிமுக திமுக என இரு கட்சி நிர்வாகிகளுமே பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. பார்ப்பதற்கு 'ரக்கட் பாய்' மாதிரி இருந்தாலும் மேடைகளில் ஆவேசமாக பேசினாலும், அரசியல் ரீதியாக மட்டுமே அவர் ஆக்ரோஷமானவர். மற்றபடி தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் சாந்த குணம் கொண்டவர் என்கின்றனர்.

    Advertisement

    வழக்குகளே இல்லை

    கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருக்கும் அவர் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஆனால் இதுவரை அவர் மீது எந்தவித வழக்குகளும் அதாவது கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் எதுவும் இல்லை. என்பதும் தமிழக அரசியலில் மிகவும் அரிதான அரிதானது என்று சிலாகித்து சொல்கின்றனர்.

    English Summary

    The story behind Anita Radhakrishnan's famous name, political journey and his long-standing bond with Seeman's family.