விஜய் சேதுபதியின் கருத்தை எப்படி பாக்குறீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்

  • சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் அதிகம் பரவி வருகிறது. இதற்கு தவெகவினரும் இணையதளத்தில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததை பார்க்கலாம்.

    Advertisement

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி கடந்த சனிக்கிழமை வெளியான நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Advertisement

    விஜய் சேதுபதி பிக் பாஸ் போட்டியாளரான ஷாதிதாவிடம் பேசும் போது, "இந்த வாரம் தலைவராக பதவி ஏற்பதற்கு முன்பு என்ன வாக்குறுதிகள் கொடுத்தீங்க? அதை எல்லாம் சரியா செஞ்சீங்களா? என்று கேட்டார். அதற்கு ஷாதிதா நான் கொடுத்த வாக்குறுதிகளை செய்ய முயற்சி செய்தேன் சார். ஆனால் முடியவில்லை என்றார்.

    உடனே குறுக்கிட்ட விஜய் சேதுபதி, லீடர்ஷிப் என்றால் என்ன என்பதை தெரியாமல் பதவிக்கு வருவதற்கு முன்பு வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, பிறகு பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சியின் மீது பழியை போட்டுவிட்டு ஓடிவிடுவது ரிலேஷன் லீடர்ஷிப் கிடையாது" என்றார்.

    Advertisement

    விஜய் சேதுபதி, தமிழக முதல்வர் விஜய்யைத் தான் மறைமுகமாக விமர்சித்தாக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. தவெகவினரும் இணையதளத்தில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து தவெகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், அதிமுக எம்பி இன்பதுரை விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நிற்போம் என்று பதிவிட்டு இருந்தார்.

    இன்பதுரை கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்' என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் சேதுபதி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "விஜய் சேதுபதி, எடப்பாடி பழனிசாமி,
    பார்க்கவில்லை.. பார்த்தால் தானே பதில் சொல்ல முடியும்" என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

    Advertisement

    விஜய் வந்த பிறகு தான் தொழில் முதலீடு பற்றி தெரியும். அரசு வெளியிட்டால் தான் தெரியும். தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் சென்றதாக செய்திக்குறிப்பில் வெளியானது. தற்போது வந்துள்ள படங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் தொழில் முதலீடுகளை ஈர்க்க போன மாதிரி தெரியவில்லை. அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் சொல்ல முடியும் என்று கூறினார்.

    English Summary

    Vijay Sethupathi: Videos are circulating widely on social media suggesting that actor Vijay Sethupathi indirectly criticized Tamil Nadu Chief Minister Vijay. In response, members of the TVK party have been posting harsh criticisms of Vijay Sethupathi online. Let us look at how AIADMK General Secretary Edappadi Palaniswami responded when reporters asked him about this matter.