600 ரூபாய் எம்-சாண்ட் பெங்களூரில் ₹7000? தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை குறிவைக்கும் அந்த விஐபி?

  • சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 30 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அரசின் தற்போதைய நிர்வாகத் திறன், நிதி மேலாண்மை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் கடுமையான மற்றும் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசுக்கு பெரும் வருவாயைத் தரும் டாஸ்மாக்கை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு, அதை முழுமையாகப் பிரைவேட் பண்ணுவதற்கான வேலைகளைத்தான் இந்த அரசு செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Aransei என்ற சேனலுக்கு தந்த பேட்டியில நக்கீரன் பிரகாஷ் பேசும்போது, "அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே உதய மின் திட்டத்தின் கீழ் மின் கட்டணத்தை உயர்த்தப் போகிறார்கள். ஆனால், அதற்கு முன்பாக வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்து கடன் அதிகமாக இருப்பதாகக் கைவிரிக்கிறார்கள்.

    Advertisement

    12 லட்சம் கோடி ரூபாய்

    ஒரு வருடத்திற்கு முன்பே கடன் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்திருந்தும், எதற்காக பட்ஜெட்டில் சாத்தியமில்லாத 12 லட்சம் கோடி ரூபாய்க்கான இலவச திட்டங்களை வாக்குறுதிகளாகக் கொடுத்தார்கள்?

    பக்கத்து மாநிலமான கேரளாவில் அரசு பொறுப்பேற்ற 32 நாட்களுக்குள் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்தில், கொடுத்த முக்கிய வாக்குறுதிகளான ₹2500, பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு ₹4000, மாமன் சீர், மச்சான் சீர், விவசாய கடன் தள்ளுபடி என எதைப் பற்றியும் இந்த அரசு கவலைப்படவில்லை. தமிழக மக்கள் எதை வைத்து வாக்களிக்கிறார்கள் என்றே தெரியவில்லை,

    Advertisement

    தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள்

    தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. கிருஷ்ணகிரியில் ஒரு லோடு எம்-சாண்ட் எடுக்க 600 ரூபாய் தான் செலவாகும், ஆனால் அதுவே பெங்களூரில் 10 மடங்கு அதிக விலைக்கு அதாவது 7,000 ரூபாய் விற்கப்படுகிறது.

    இந்த இயற்கை வளங்களை அரசு தேசியமயமாக்காமல், தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள். சவுடு மணல் குவாரி மூலமாக மட்டும் மாதத்திற்கு 30 கோடி ரூபாய் கைமாறுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த கால ஆட்சிகளில் நடந்த மணல் கொள்ளையை விட, இந்த ஆட்சியில் விஷ்ணு ரெட்டியின் சமுத்ரா நிறுவனம் மற்றும் ஆதவ் அர்ஜுன் ரெட்டி ஆகியோர் மூலமாக முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கொள்ளை நடக்கிறது.

    Advertisement

    தமிழக அரசு 30 நாட்கள் சாதனை

    அரசுக்கு பெரும் வருவாயைத் தரும் டாஸ்மாக்கை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு, அதை முழுமையாகப் பிரைவேட் பண்ணுவதற்கான வேலைகளைத்தான் இந்த அரசு செய்து வருகிறது. இவர்களுக்குக் காசுதான் முக்கியமே தவிர, ஊழலை ஒழிக்கப் போவது கிடையாது.

    திமுக, அதிமுக அடித்த கொள்ளையை விட இவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய கொள்ளையைத்தான் அடிக்க வந்திருக்கிறார்கள் என்பது இந்த 30 நாட்களிலேயே நமக்குத் தெரிய வந்துள்ளது" என்றெல்லாம் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

    English Summary

    ₹600 M-Sand for ₹7000 in Bengaluru? The Mystery 'VIP' Targeting Tamil Nadu’s Natural Resources Exposed