சென்னை: பிரதமர் மோடி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு தற்போது வயது 76. ஆனால் இன்னும் அவர் திடகாத்திரமாக இருக்கிறார். வேகமாக நடக்கிறார். மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வந்தாலும் ஓய்வு எடுக்காமல் உடனடியாக அன்றாடவேலையை செய்து வருகிறார். இது எப்படி சாத்தியம்? பிரதமர் மோடி போல் 76 வயதிலும் ஆக்டிவ்வாக செயல்பட பொதுமக்கள் பின்பற்றக்கூடிய எளிய 5 டிப்ஸ்கள் இதோ.
பிரதமர் மோடி நேற்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் அவர் நடை, உடை, பாவணையில் 76 வயது நிரம்பியவர் போல் தெரிவது இல்லை. மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் இந்த ஆக்டிவ்வான செயல்பாட்டுக்கு பின்னால் அவர் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் தான் காரணம் அன்றாட செயல்பாடு தான் உள்ளது.
தினமும் யோகா, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், விரதம், உணவுப்பழக்க வழக்கத்தில் கட்டுப்பாட்டை பின்பற்றுதல் உள்ளிட்டவை அடங்கும். இதுபற்றி அவரே பலமுறை பேசியுள்ளார். கடும் பணிச்சுமை, அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் நீண்ட நேர பொது நிகழ்ச்சிகளுக்கு மத்தியிலும் அவர் கடைப்பிடிக்கும் உடற்பயிற்சி நடைமுறைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி போல் உடல் ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய 5 முக்கிய பழக்க வழக்கங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே உடல்நல பிரச்சினைகள் உள்ளவர்கள், முதியவர்கள் இதனை கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது. இதனை கடைப்பிடிப்பதற்கு முன் உரிய நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்று கொள்வது நல்லது. தினமும் நடைப்பயிற்சி, உடலை நீட்டி வளைக்கும் பயிற்சிகள் (stretching), யோகா மற்றும் வயதுக்கு ஏற்ற வலிமைக்கான பயிற்சிகள் உள்ளிட்டவை உடல் இயக்கம், சமநிலை, இதய ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். குறிப்பாக பிரதமர் மோடி நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பல இடங்களில் பேசியுள்ளார். 'பஞ்சபூதங்கள்' (பஞ்சதத்வா) என்ற கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடைபாதை குறித்த விவரங்களையும் அவர் முன்னதாகப் பகிர்ந்துள்ளார். இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, புல், மண் மற்றும் கூழாங்கற்கள் போன்ற பரப்புகளில் அவர் வெறும் காலால் நடப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வெறும் காலால நடபபது அனைவருக்கும் பொருந்தாது. சர்க்கரை நோய், பாதங்களில் பிரச்சனை உள்ளிட்டவர்கள் டாக்டர்களின் அறிவுரைக்கு பிறகு இதனை பின்பற்றலாம். பிரதமர் மோடி யோகா செய்து வருகிறார். சூர்ய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, பிரனயமா, பிற யோகாசனங்கள் உள்ளிட்டவற்றை தினமும் மேற்கொண்டு வருகிறார். யோகா தினம் அனுசரிப்பதை கட்டாயமாக்கியதில் இருந்தே பிரதமர் மோடிக்கு அதன் மீதான ஈர்ப்பு எவ்வளவு இருக்கிறது? என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். யோகா செய்வது என்பது மனஅழுத்தத்தை குறைக்கும். முதுகு வலியை குறைக்கும், தலைச்சுற்றலை நிறுத்தும். இருப்பினும் முதியவர்கள் யோகா செய்ய விரும்பினால் உரிய பயிற்சியாளரின் வழிக்காட்டுதலில் செய்ய வேண்டும். பிரதமர் மோடி உணவு கட்டுப்பாட்டை முறையாக கடைப்பிடித்து வருகிார். இவர் கிச்சடி, தால், அரிசி சாதம், போஹா, காய்கறிகள், குஜராத் ஸ்டைல் டிஷ்கள் உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடுவதாக இண்டர்வியூக்களில் தெரிவித்துள்ளார். அதேபோல் முருங்கைக்காய், பரோட்டோ உள்ளிட்டவற்றையும் விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது இல்லை. அவ்வப்போது விரும்பி கொஞ்சமாக சாப்பிடுகிறார். குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் பிரதமர் மோடி உணவு எடுத்து கொள்வது கிடையாது. இவை அனைத்தும் பிரதமர் மோடியின் உணவு கட்டுப்பாடு தானே தவிர அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. ஒருநாளைக்கு ஒருவர் 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி தினமும் வெறும் மூன்றரை மணிநேரம் அல்லது 5 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பிரதமர் மோடி தினமும் முறையான தூக்கத்தை கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர் தொடர் பணிகளால் சோர்வடையாமல் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் நாமும் அதனை கடைப்பிடிக்கலாம். பிரதமர் என்பது வெறும் சாதாரண பொறுப்பு அல்ல. உள்நாட்டின் நிர்வகிப்பதோடு, உலகளவில் தினமும் என்ன நடக்கிறது? என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு முடிவுகளும் நாட்டின் நலன் சார்ந்து எடுக்க வேண்டும். இதனால் மனஅழுத்தம் நிச்சயம் இருக்கும். ஆனால் அதனை கையாள்வது மிகவும் அவசியம். மனஅழுத்தத்தை சமாளிக்க வேண்டிய டெக்னிக் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக பிரதமர் மோடி போன்று 75 வயதை தாண்டியவர்களுக்கு இது கட்டாயம் வேண்டும். மனஅழுத்தம் மட்டுமின்றி உடல் எடையை பராமரித்தல், நோய் அபாயத்தை குறைத்தல் உள்ளிட்டவை மிகவும் அவசியம். இதனையும் நாம் உரிய ஆலோசனைகளுடன் பின்பற்றினால் வயதான காலத்திலும் நோயின்றி மிகவும் ஆக்டிவ்வாக வாழலாம்.1. உடற்பயிற்சி
2.யோகா
3. உணவு கட்டுப்பாடு
4. தூக்கத்துக்கு முக்கியத்துவம்
5. மனஅழுத்தத்தை கையாளுதல்