வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? ஐசியூவில் இருந்து வார்டுக்கு மாற்றமா? இன்று மருத்துவ அறிக்கை?

  • சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 23 ஆம் தேதி முதல்வர் விஜய், பாபுவை சந்தித்து அவரது உடல்நிலையை கேட்டறிந்தார்.

    Advertisement

    கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு களமிறக்கப்பட்டார். வி.எஸ். பாபு திமுக, அதிமுகவில் பயணித்தவர். கடைசியாக அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார்.

    Advertisement

    அவர் ஸ்டாலினை விட 8795 வாக்குகள் அதிகம் பெற்று வி.எஸ்.பாபு வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையரிடம் வெற்றிச் சான்றிதழை வாங்கச் சென்ற வி.எஸ்.பாபு, ஸ்டாலினை போல் ஃபினிஷ்டு சைகை காட்டியது டிரெண்டானது.

    அவரை போல் எல்லாரும் காட்டினார்கள். விஜய்யும் சட்டசபையில் ஃபினிஷ்டு சைகையை காட்டினார். அவருக்கு அமைச்சர் பதவி, அல்லது சபாநாயகர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர்களை தோற்கடித்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் பாபுவுக்கு வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் அண்மையில் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் கலந்து கொண்டார். கூட்டத் தொடர் 22 நாட்கள் நடந்தது. அனைத்திலும் அவர் கலந்து கொண்டார்.

    Advertisement

    கடைசி நாளான செப்டம்பர் 8ஆம் தேதியும் அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் கூட்டத் தொடர் முடிந்ததும் வீட்டிற்கு வந்த பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு ஐசியூவில் 16 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை எம்ஜிஎம் நிர்வாகம் , பாபுவின் உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் எல்லாம் அவரது உடல்நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    அது போல் அவரை சந்தித்த அமைச்சர்கள் மரிய வில்சன், அருண்ராஜ் உள்ளிட்டோரும் பாபு நலமாக இருப்பதாகவே தெரிவித்திருந்தனர். மேலும் கடந்த 23 ஆம் தேதி முதல்வர் விஜய், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    Advertisement

    அப்போது ஐசியூவில் இருந்த பாபுவை சந்தித்த அவர், அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். கையில் முத்தமிட்டு, சீக்கிரம் குணமாகி வாங்க சட்டசபையில் கலக்கலாம் என விஜய் அழைத்தார். அப்போது ஓரிரு நாட்களில் பாபு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் அதன் பிறகு எந்த அப்டேடும் வரவில்லை. அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. எனவே இன்றைய தினம் எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

    English Summary

    How is Kolathur MLA V.S.Babu health? Will the MGM Health care releases medical bulletin?