தமிழகத்தில் எந்த ஜாதியில் எத்தனை அமைச்சர்கள்.. விஜய் கேபினெட் முழு விவரம்

  • சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த 23 பேருடன் சேர்ந்து மொத்தம் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் சாதி வாரியாக எந்த ஜாதியில் எத்தனை அமைச்சர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

    Advertisement

    மொத்த அமைச்சர்கள்: 33

    தமிழக வெற்றிக் கழகம் 31 அமைச்சர்கள்

    Advertisement

    இந்திய தேசிய காங்கிரஸ் : 02 அமைச்சர்கள்

    சமூக வாரியான அமைச்சர்கள் ஒதுக்கீடு

    1. பட்டியல் இனத்தவர்: 07 இடங்கள்
    அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் சமத்துவப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாகப் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன:

    பறையர்: 05 இடங்கள்

    தேவேந்திர குல வேளாளர் : 01 இடம்

    அருந்ததியர்: 01 இடம்

    2. வேளாளர் / கவுண்டர் சமூகங்கள் : 05 இடங்கள்
    கொங்கு வேளாளர் : 03 இடங்கள்

    சைவ வேளாளர் : 01 இடம்

    சோழிய வேளாளர் : 01 இடம்

    Advertisement

    3. வன்னியர் (Vanniyar): 04 இடங்கள்
    வட தமிழகத்தின் முக்கியப் பிரதிநிதித்துவமாக வன்னியர் சமூகத்திற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    4. முக்குலத்தோர் : 03 இடங்கள்

    தென் தமிழகத்தின் முக்கியப் பின்னணியைக் கொண்ட முக்குலத்தோர் சமூகத்திற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன:

    கள்ளர்: 01 இடம்

    மறவர்: 01 இடம்

    அகமுடையார்: 01 இடம்

    5. நாடார் (Nadar): 03 இடங்கள்
    வணிகம் மற்றும் கடலோரப் பகுதிப் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய நாடார் சமூகத்திற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    6. பிராமணர் (Brahmin): 02 இடங்கள்
    ஐயங்கார் (Iyengar): 01 இடம்

    ஐயர் (Iyer): 01 இடம்

    Advertisement

    7. நாயுடு (Naidu): 02 இடங்கள்
    கம்மா (Kamma): 01 இடம்

    கவரா (Gavara): 01 இடம்

    8. இதர சமூகங்கள் (ஒவ்வொரு இடம்): 06 இடங்கள்

    அமைச்சரவையில் பரவலான சமூக சமநிலையைப் பேணும் வகையில் பின்வரும் சமூகங்களுக்குத் தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது:

    ரெட்டியார் (Reddy): 01 இடம்

    யாதவர் (Yadav): 01 இடம்

    விஸ்வகர்மா (Vishwakarma): 01 இடம்

    மீனவர் (Meenavar): 01 இடம்

    முத்துராஜா / 24 மனை தெலுங்கு செட்டியார் (MTC): 01 இடம்

    இஸ்லாமியர் (Muslim): 01 இடம்

    Advertisement

    அறியப்படாதவர்: 01 இடம் (வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பின குமாரின் சமூகப் பின்னணி குறித்த அதிகாரப்பூர்வ விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை).

    இந்த அமைச்சரவை அமைப்பானது தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும், பல்வேறு சமூகக் குழுக்களையும் உள்ளடக்கிய ஒரு பரவலான உள்ளடக்கப் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது

    மாவட்ட வாரியாக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம்

    சென்னை 7
    செங்கல்பட்டு 1
    காஞ்சிபுரம் 2
    ராணிப்பேட்டை 1
    சேலம் 1
    நாமக்கல் 3
    ஈரோடு 2
    திருப்பூர் 1
    கோவை 2
    திருச்சி 1
    கடலூர் 1
    தஞ்சாவூர் 1
    புதுக்கோட்டை 1
    சிவகங்கை 1
    இராமநாதபுரம் 1
    மதுரை 2(காங்கிரஸ் 1)
    விருதுநகர் 2
    தூத்துக்குடி 2
    கன்னியாகுமரி 1( காங்கிரஸ்)

    Advertisement

    இன்று பதவியேற்ற அமைச்சர்கள்

    1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ,

    2. எஸ்.கமலி - அவிநாசி,

    3. சி.விஜயலக்‌ஷமி - குமாரபாளையம்,

    4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம்,

    5. வினோத் - கும்பகோணம்,

    6. ராஜீவி - திருவாடானை,

    7. பி.ராஜ்குமார் - கடலூர்,

    8. வி.காந்திராஜ் - அரக்கோணம்,

    9. மதன்ராஜ்.பி - ஒட்டப்பிடாரம்,

    10. ஜெகதீஸ்வரி.கே - ராஜபாளையம்,

    11. ராஜேஷ்குமார்.எஸ் - கிள்ளியூர்,

    12. விஜய்பாலாஜி.எம் - ஈரோடு கிழக்கு,

    13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி - ராசிபுரம், 1

    4. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - சேலம் தெற்கு,

    15. ரமேஷ் - ஸ்ரீரங்கம்,

    16. பி.விஸ்வநாதன் - மேலூர்,

    17. குமார்.ஆர் - வேளச்சேரி,

    18. தென்னரசு.கே - ஸ்ரீபெரும்புதூர்,

    19. சம்பத்குமார்.வி - கோவை வடக்கு,

    20. முகமது ஃபர்வாஸ்.ஜே - அறந்தாங்கி,

    21. டி,சரத்குமார் - தாம்பரம்,

    22. மரிய வில்சன் - ராதாகிருஷ்ணன் நகர்,

    23. விக்னேஷ்.கே - கிணத்துக்கடவு ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

    Topics: #vijay #tvk