சென்னை: கடலில் பல ஆயிரம் டன் எடையை சுமந்து கொண்டு கப்பல்கள் சென்று வருகின்றன. உலகின் சரக்கு போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கக் கூடிய இந்தக் கப்பல்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல எவ்வளவு செலவு ஆகும்?, கப்பலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன? அதன் மைலேஜ்ஜை எப்படி கணக்கிடுவார்கள் என்பது பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பொதுவாக நாம் ஒரு பைக்கோ, காரோ வாங்கினால் முதலில் அது எவ்வளவு மைலேஜ் தரும் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கும. இப்படி ஒரு வாகனத்தை பார்த்தவுடனே நமக்குள் எழும் கேள்வி, இது இயங்குவதற்கு எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்பதேயாகும். ரயில், விமானம், கப்பல் என எதுவும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
இன்ஸ்டகிராம் வீடியோக்களிலோ அல்லது துறைமுகங்களை ஒட்டிய கடல் பகுதிக்கு செல்லும் போதோ கப்பலை பலரும் பார்த்து இருப்போம். சிலர் கப்பலில் பயணம் கூட செய்து இருப்போம். கடலில் மிதக்கும் தீவு போல பிரம்மாண்டமாக காட்சி தரும் ஒரு கப்பல் ஒரு கிமீ தூரம் செல்ல எவ்வளவு எரிபொருள் செலவு ஆகும் தெரியுமா? அதைப்பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். கடலில் மிதக்கும் தீவு போல பல பிரமாண்ட கப்பல்கள் மிதந்து செல்கின்றன. ஒரு கப்பல் ஒரு லிட்டருக்கு எவ்வளவு தூரம் செல்லும் என கேப்பதை விட ஒரு கிலோ மீட்டர் செல்ல, எவ்வளவு எரிபொருள் செலவு ஆகும் எனக் கேப்பதே சரியான ஒன்றாகும். ஏனெனில் கப்பல் சில மீட்டர்கள் செல்வதற்கே பெரும் எரிபொருள் தேவப்படுகிறது. சாதாரணமாக ஒரு நடுத்தர வகையிலான சரக்கு கப்பல்களை எடுத்துக்கொண்டோம் என்றால் அது ஒரு 350 முதல் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இத்தகைய நீளம் கொண்ட கப்பல்கள், சரக்குகள் இல்லாமல் வெற்று கப்பலாக மட்டும் சுமார் 50,000 முதல் 55,000 மெட்ரிக் டன் எடை கொண்டதாக இருக்கும். இந்த கப்பல்கள் ஒரு கிலோ மீட்டர் நகர்வதற்கு தோராயமாக 200 முதல் 250 லிட்டர் வரை எரிபொருள் செலவு ஆகுமாம். இது கப்பலின் வேகம் மற்றும் அதன் சரக்கு எடையின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். ஒருநாளைக்கு பயணம் செய்கிறது என்றால் சுமார் 150 முதல் 250 டன் எரிபொருள் தேவைப்படும். சரக்கு கப்பல்கள் பொதுவாக 20 முதல் 24 நாட்ஸ்கள் வேகத்தில் செல்லும். (ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்திற்கு ஒரு கடல் மைல்). கப்பலின் வேகத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட அதன் எரிபொருள் தேவையும் கணிசமாக உயரும். கப்பல் பெட்ரோலில் ஓடுமா? அல்லது டீசலில் ஓடுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நீங்கள் நினைக்கிற மாதிரி இரண்டிலுமே ஓடாது. ஏனெனில் கப்பலுக்கென பிரத்யேக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. கப்பலுக்கான பிரத்யேக மரைன் எரிபொருள் (marine fuels) பயன்படுத்தப்படுகிறது. அதாவது குறைந்த சல்ஃபர் எரிபொருள் (VLSFO) அல்லது ஹெவி எரிபொருள் எண்ணெய் (HFO) பயன்படுத்தப்படும். இந்த எரிபொருளை மொத்தமாக பங்கர் பியூல் என்று அறியப்படுகிறது. இந்த எரிபொருள வழக்கமான டீசலை விட மிகவும் கடினமான திடமான ஒன்றாக இருக்கும். கப்பல் என்ஜின்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எரிபொருளாகும். தற்போது, கப்பல்களில் பெரும்பாலும் சல்ஃபர் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக, மிகக் குறைந்த சல்பர் அளவு கொண்ட எரிபொருளே பயன்படுத்தப்படுகின்றன. கப்பல்களுக்குப் பயன்படுத்தப்படும் கடல்சார் எரிபொருளின் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஒரு பெரிய சரக்கு கப்பல் ஒரு கிலோ மீட்டர் செல்வதற்கு 250 லிட்டர் எரிபொருள் தோராயமாக தேவைப்படும். இதை வைத்து கணக்கிட்டால் ஒரு கிலோ மீட்டர் செல்வதற்கே ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு ஆகும். கப்பலை பொறுத்தவரை இவ்வளவுதான் எரிபொருள் செலவு ஆகும் என்று அறுதியிட்டு கூற முடியாது. கப்பலின் அளவு, அதன் எடைக்கு ஏற்ப அதன் எரிபொருள் நுகர்வும் மாறும் தன்மை கொண்டது. கப்பலின் வேகமும் இதில் முக்கிய பங்காற்றும்.எவ்வளவு எரிபொருள் செலவு ஆகும்?
பாய்ந்து வந்த மிசைல்.. நடுக்கடலில் இந்திய மாலுமிகள் எதிர்கொண்ட பிரச்சனை! ஹார்முஸ் ஜலசந்தியில் ஷாக்
1 கிமீ செல்ல 250 லிட்டர் தேவைப்படும்
இந்தியர்கள் சென்ற கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்.. கருடங்கடலில் பதற்றம்! என்ன நடந்தது?
பெட்ரோலா?.. டீசலா?
ஒரு கிமீ தூரம் செல்ல ரூ.20 ஆயிரம் செலவு ஆகும்
கடலில் மிதக்கும் ஐபோன்கள்.. படகில் அள்ளி செல்லும் மக்கள்.. ஹார்முஸ் ஜலசந்தியில் போட்டா போட்டி