மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வுக்கு பின் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் தெரியுமா?

  • சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வுக்கு பின் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் தெரியுமா.. 48.54 லட்சம் பேர் பயன் பெற உள்ள இந்த திட்டம், உண்மையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தானா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

    Advertisement

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 60 சதவீதத்துடன் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.

    Advertisement

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் அகவிலைப்படி உயர்வுடன், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் கூடுதல் தவணையாக வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அளிக்கப்பட்டு உள்ள இந்த ஒப்புதலின்படி இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உயர்வு காரணமாக, மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மூலம், 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

    Advertisement

    இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தீபாவளிக்கு ஜாக்பாட்.. அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

    அகவிலைப்படி உயர்வு என்பது ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அடிப்படைச் சம்பளத்திற்கு ஏற்ப மாதந்தோறும் கூடுதலாகக் கிடைக்கும் தொகை மற்றும் புதிய மொத்த அகவிலைப்படித் தொகை பற்றி விரிவாக பார்ப்போம்.

    இந்த கணக்கு தோராயமான கணக்கு தான். அடிப்படைச் சம்பளம் சுமார் ₹25,000 வாங்கும் ஒரு ஊழியருக்கு 3% அகவிலைப்படி உயர்வால் மாதத்திற்கு ₹750 கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு முன் 60% அகவிலைப்படியாக ₹15,000 கிடைத்து வந்த நிலையில், தற்போது 63% அகவிலைப்படியாக ₹15,750 கிடைக்கும். இதன் மூலம், அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து பெறக்கூடிய மொத்தத் தொகை ₹40,000-லிருந்து ₹40,750 ஆக உயரும்.

    Advertisement

    சுமார் ₹50,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் வேறாக இருக்கும். பெறும் ஊழியர்களுக்கு 3% உயர்வு மூலம் மாதந்தோறும் ₹1,500 கூடுதல் வருமானம் கிடைக்கும். ஏற்கனவே 60% அகவிலைப்படியாக ₹30,000 பெற்று வந்த சூழலில், 63% உயர்வின்படி இது ₹31,500 ஆக அதிகரிக்கும். இதனால், அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி இரண்டும் சேர்த்து மாதத்திற்கு ₹80,000 பெறப்பட்ட இடத்தில் இனி ₹81,500 கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    ₹75,000 சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு காரணமாக மாதத்திற்கு ₹2,250 கூடுதலாக உயரும். முன்பு 60% விகிதத்தில் ₹45,000 ஆக இருந்த அகவிலைப்படித் தொகை, இனி 63% உயர்வால் ₹47,250 ஆக அதிகரிக்கும். இதன் மூலம், அடிப்படைச் சம்பளமும் அகவிலைப்படியும் இணைந்த மொத்தத் தொகை (₹1,20,000-லிருந்து ₹1,22,250 ஆக உயரும்).

    Advertisement
    தீபாவளிக்கு மறுநாள்.. நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

    மாதம் ₹1,00,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த 3% அகவிலைப்படி உயர்வால் பிரதி மாதம் ₹3,000 கூடுதல் பணம் கிடைக்கும். 60% அகவிலைப்படியின் கீழ் ₹60,000 ஆக இருந்த தொகை, தற்போது 63% ஆக உயர்ந்திருப்பதால் ₹63,000 ஆக மாறும். இதனால், இவர்களது அடிப்படைச் சம்பளமும் அகவிலைப்படியும் சேர்ந்த மொத்த தொகை ₹1,60,000-லிருந்து ₹1,63,000 ஆக அதிகரிக்கும்.

    இதில் அவர்களின் முழு சம்பளத்தில் கணக்கிடப்படுவது அல்ல. அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியைக் கொண்ட தோராயமான கணக்கீடு தான்.வீட்டு வாடகைப்படி, பயணப்படி போன்ற இதர படிகள் மற்றும் பி.எஃப், வரி பிடித்தங்கள் ஆகியவை ஊழியரின் பணியிடம் மற்றும் பதவிக்கு ஏற்ப மாறும்.

    Advertisement

    இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஜூலை மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படுவதால் மொத்தம் நான்கு மாதங்களுக்கான மொத்த தொகையும் நவம்பர் சம்பளத்துடன் சேர்த்து கிடைக்கும். இது‌தவிர தீபாவளி போனஸ் கிடைத்துள்ளதால் அரசின் முடிவால் தீபாவளி பரிசாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Do you know how much salary central government employees will receive following the 3 percent hike in their Dearness Allowance (DA)? In this post, we will examine whether this initiative—which stands to benefit 48.54 lakh employees—is truly a Diwali gift for them.