சென்னை: 18 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திர தொகையை வழங்குவது பற்றி தமிழக அரசு புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால மாதாந்திரத் தொகையாக நிலையான தொகையான ரூ.10 ஆயிரம் மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக இதுபற்றி பார்ப்போம்.
இதுகுறித்து அரசு கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநருக்கு நிதித்துறை செயலாளர் (செலவினம்) வெங்கடேஷ் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: "10 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான தகுதியான பணிக்காலத்துடன் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்கால மாதாந்திரத் தொகையை அனுமதிப்பது, அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி அனுமதிக்கத்தக்க தொகையைவிட இடைக்காலத் தொகை அதிகமாக இருக்க வழிவகுக்கும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை அரசு ஆய்வு செய்தது. இடைக்காலத் தொகையானது, அனுமதிக்கத்தக்க தொகையைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது அதிகப்படியான தொகையை திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்துவிடும். மேலும், அது பிற்காலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (டாப்ஸ்) கீழ் நிகர தகுதியான பணிக்காலம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே சரியான அனுமதிக்கத்தக்க தொகையைத் தீர்மானிக்க அதுபற்றி இப்போது கணக்கிட முடியாது. எனவே சில அறிவுறுத்தல்களை அரசு வழங்குகிறது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால மாதாந்திரத் தொகையாக நிலையான தொகையான ரூ.10 ஆயிரம் மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் அனுமதிக்கப்படும். டாப்ஸ் விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் உண்மையான அனுமதிக்கத்தக்க தொகை கணக்கிடப்பட்டு, அதில் வரும் வித்தியாசம், நிலுவைத் தொகையாக வழங்கப்படும். 18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் என்பதில், எது அதிகமோ அந்தத் தொகையுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் சேர்த்து இடைக்காலத் தொகையாக தொடர்ந்து அனுமதிக்கப்படும். 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்காலத் தொகை அனுமதிக்கப்பட்டிருந்தால், அது வரம்பிற்கு உட்படுத்தப்படும். மேலும், அகவிலைப்படி உள்பட வழங்கப்பட்ட அதிகப்படியான தொகை, இந்த மாதம் முதல் இடைக்காலத் தொகை அல்லது இடைக்கால குடும்பத் தொகையிலிருந்து 10 சம தவணைகளில் திரும்பப் பெறப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான அரசு ஊழியர்கள் பலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும்போதோ அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாத ஊதியம் அல்லது குடும்பத்தினருக்கு இடைக்கால மாத குடும்ப ஊதியம் வழங்கப்படுகிறது.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான இடைக்கால மாத ஊதியம், கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 6-வது ஊதியக்குழு ஊதிய விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இடைக்கால மாத ஊதியம் மற்றும் இடைக்கால மாத குடும்ப ஊதியத்துக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஒரே சீராக 60 சதவீதமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவினை அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு என்ன