எம்எல்ஏக்கள் சம்பளம் இனி எவ்வளவு.. கூடுதலாக ஒரு லட்சம்.. முதல்வர் விஜய் முடிவிற்கு எதிர்ப்பு

  • சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது, கடந்த 12-ம் தேதி பேசிய விசிக எம்எல்ஏ ஜோதிமணி, "பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் என்னுடைய தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. வாடகைக்கு வாகனம் எடுத்தே செல்ல வேண்டியதாக உள்ளது. என்னைப்போல பல எம்எல்ஏக்கள் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது. அரசு இதனை கவனத்தில் கொண்டு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும்" என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார்.

    Advertisement

    அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், "முதல்வர் ஜோசப் விஜய்யின் கரங்கள் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் இதனை கவனித்தில் கொண்ட முதல்வர் விஜய், இன்று விதி எண் 110ன் கீழ் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    முதல்வர் விஜய் அறிவிப்பு

    அதன்படி, "எளிய பின்னணியைக் கொண்டவர்களை மக்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மேலும், எம்எல்ஏக்கள் தங்களுக்கென்று ஓர் உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். இதனை எம்எல்ஏக்கள் வரவேற்றுள்ளனர்.

    அரசின் பார்வை என்ன

    ஏனெனில் முதல்வர் விஜய் சொன்னது போல் முதல்முறையாக தவெகவில் 107 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இடதுசாரி எம்எம்ஏக்கள் 4 பேர், விசிக எம்எல்ஏக்கள் 2 பேர், அதிமுகவில் சிலர், திமுகவில் சிலர் மிகவும் எளிய பின்னணி கொண்டவர்கள் ஆவார். இவர்கள் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் தொகுதியில் தான் வலம் வர வேண்டியதிருக்குக்கும்.

    Advertisement

    அப்படி வலம் வரும் எம்எல்ஏக்கள் தொகுதியை ஆய்வு செய்ய பெட்ரோல் செலவுக்கு மாதம் 75 ஆயிரம் அவசியம் தேவை என்றும், அவருக்கு உதவியாளர் நியமிக்க 25 ஆயிரம் அவசியம் என்றும் முதல்வர் விஜய் கருதுகிறார். ஏனெனில் இந்த செலவுகளை சம்பளத்தில் செய்தால், அவர்கள் வாங்கும் ஒரு லட்சம் சம்பளம், அதற்கே சரியாக போகும் என்றும், அதன்பின்னர் அது ஊழலுக்கே வழிவகுக்கும் என்று தவெக அரசு எண்ணுகிறது. அதனால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    நெட்டிசன்கள் பார்வை

    ஆனால் நெட்டிசன்கள் பார்வை வேறாக உள்ளது. ஒரு எம்எல்ஏவின் ஒரு மாத சம்பளம் ஒரு லட்சத்திற்கு மேல் வழங்கப்படுகிறது. ஆனால் ஏழை எளியவர்கள் மாதம் ₹15,000 முதல் ₹20,000 சம்பாதிப்பதே இன்றைக்கு சவலாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் தவிர்த்து, வாகன பராமரிப்பிற்கும் உதவியாளருக்கு மட்டுமே மாதம் ₹1,00,000 படி வழங்குவது என்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது போல உள்ளதாக கொதிக்கிறார்கள். ஏனெனில் ஆண்டு ஆண்டு காலமாக பல தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் மக்களைச் சந்திப்பதே அரிதான நிகழ்வு என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. வாக்களித்த மக்களுக்கு எம்எல்ஏவை அடிக்கடி காணும் வாய்ப்ப கிடைப்பது இல்லை என்றும், ஆய்வுகள் எல்லா ஊர்களிலும் அடிக்கடி அவர்கள் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்பது இல்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

    Advertisement


    தமிழ்நாடு எம்எல்ஏக்கள் சம்பளம் எவ்வளவு

    கடந்த 2017 ஆம் ஆண்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டது. ரூ.55 ஆயிரமாக இருந்த ஊதியம், சம்பளம் மற்றும் படித்தொகைகள் சேர்த்த ஒட்டு மொத்த ஊதியம் ரூ.1,05,000 என்று உயர்த்தப்பட்டது.

    அடிப்படை ஊதியம்: ரூ.30 ஆயிரம்
    மாதாந்திர ஈட்டுப்படி ரூ.10,000
    தொகுதிப்படி ரூ.25,000
    அஞ்சல் படி ரூ.2500
    தொலைபேசிப்படி ரூ.7500
    தொகுப்புப்படி ரூ.5000
    வாகனப்படி ரூ.25,000 என மொத்தம் 105000 ஆக இருந்தது.

    இப்போது வாகனப்படி: 75000
    உதவியாளர் படி: 25000 கூடுதலாக வழங்கப்படுவதால், எம்எல்ஏக்களின் சம்பளம் 205000 ஆக உயரும் என தெரிகிறது. எனினும் இதில் ஏற்கனவே போக்குவரத்து படி 25000 வழங்கப்பட்டுள்ளது. அதனை மட்டும் அரசு உயர்த்தி இருந்தால் சம்பளம் சுமார் 25000 குறையும். அதேபோல் தொகுப்புப்படி 5000 என்பது உதவியாளருக்கு வழங்க ஒதுக்கப்பட்டது ஆகும். அதுதான் தற்போத 25000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றால், இன்னும் ஒரு 5000 ரூபாய் குறையும். ஒட்டுமொத்தமாக 205000 என்பதில் 30 ஆயிரத்தை கழித்தால், 107000 என்பது எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும். இதில் உதவியாளர் சம்பளத்தை அவருக்கு கொடுத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக 1.50லட்சம் எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும். முதல்வர் விஜய் இன்று விதி எண் 110ன் கீழ் அறிவித்தாலும், தெளிவான அரசாணை வந்தால் தான் எம்எல்ஏக்களின் சம்பளம் எவ்வளவு மாறி உள்ளது என்பது தெரியவரும். இது தோராயமான கணக்கு மட்டுமே. முழு விவரங்கள் தெரிய தமிழக அரசின் அரசாணையை பார்க்க வேண்டும்.

    English Summary

    How much will MLAs be paid now? Opposition to CM Vijay's decision to provide an additional one lakh