அச்சு அசலாகவே ஜி.டி. நாயுடுவாக மாறிய மாதவன்.. 'இந்தியாவின் எடிசன்' கதையில் இவ்வளவு சிறப்புகளா!

  • சென்னை: நிஜ உலகில் வாழ்ந்த ஒருவரை போல திரையில் நடிப்பது என்பது வெறும் தோற்ற ஒற்றுமையை உருவாக்குவது மட்டுமல்ல. அந்த மனிதராகவே வாழ்ந்து காட்ட வேண்டிய பொறுப்பும் அதில் இருக்கிறது. அந்த பொறுப்பை தனது நடிப்பின் முக்கிய அடையாளமாக மாற்றியவர் நடிகர் ஆர். மாதவன். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளில், அந்த கதாபாத்திரமாக முழுமையாக மாறி நடிப்பதில் அவர் தனித்துவம் பெற்றவர்.

    Advertisement

    அந்த வரிசையில், கோவையில் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட 'GDN' திரைப்படத்தில், மாதவன் மீண்டும் அதையே செய்துள்ளார்.. இந்த படத்தின் கதையை விட, ஜி.டி. நாயுடுவாக அவர் மாறிய விதமே தனி கதையாக பேசப்பட வேண்டிய ஒன்று.

    Advertisement

    நம்பி நாராயணனாக வாழ்ந்த மாதவன்

    இது மாதவனுக்கு முற்றிலும் புதிய கேரக்டர் எல்லாம் இல்லை.. ஏற்கனவே 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில், 1994ஆம் ஆண்டு உளவு வழக்கில் தவறாக சிக்கவைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக அவர் நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் படத்தை எழுதி, இயக்கியும் இருந்தார்.

    பல ஆண்டுகள் கடின உழைப்பில் உருவான அந்த திரைப்படம், 69-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. அது மாதவனின் நடிப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல; ஒரு உண்மை மனிதரின் வாழ்க்கைக்குள் முழுமையாக சென்று வாழ்ந்த அவரது அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பாராட்டாக அமைந்தது.

    Advertisement

    அஜித் தோவலின் சாயலில் 'துரந்தர்'

    அதே அர்ப்பணிப்பை இயக்குநர் ஆதித்யா தர் இயக்கித்தில் உருவான துரந்தர் திரைப்படத்திலும் அவர் வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கேரக்டரில் நடித்தார்.

    பாஸ்ட் லுக்

    பாஸ்ட் லுக் வெளியான போதே மாதவனின் லுக் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தலை முடி, அரசு பணியாளருக்கே உரிய எளிமையான தோற்றம், அமைதியான உடல்மொழி என அனைத்தும் அஜித் தோவலை நினைவூட்டியது. தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழி மற்றும் முகபாவனைகளிலும் மாதவன் அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்திருப்பார்.

    Advertisement

    இதுபோல உண்மை மனிதர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கேரக்டரில் நடிக்கும்போது, மாதவனின் அணுகுமுறை எப்போதும் தனித்துவமானது. வெறும் முக ஒற்றுமையை மட்டும் அவர் பார்ப்பதில்லை.. அந்த மனிதரின் குரல், நடை, வயதின் தாக்கம், உடல்மொழி, வாழ்க்கை அனுபவம் என அனைத்தையும் தனது நடிப்பில் பிரதிபலிக்க முயற்சிக்கிறார். இது வேகமாக முடிக்கக்கூடிய வேலை அல்ல. அதிக ஆராய்ச்சி, பொறுமை தேவைப்படும் ஒரு செயல்முறை. இந்த உழைப்பின் பலன், பார்வையாளர்களுக்கு பெரிய அளவில் தெரியாமல் இருந்தாலும், திரையில் ஒவ்வொரு சிறிய அசைவிலும் இது வெளிப்படும்.

    'GDN' படத்தின் சவால்

    'GDN' திரைப்படம், மாதவனுக்கு அவரது முந்தைய படங்களை விட பெரிய சவாலை கொடுத்துள்ளது. ஏனென்றால் இதில் அவர் ஜி.டி. நாயுடுவை ஒரு குறிப்பிட்ட வயதில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. எதுவும் இல்லாமல் தனது வாழ்க்கையை தொடங்கிய இளம் பொறியாளராக இருந்து, 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கும் அளவுக்கு உயர்ந்த தொழிலதிபராக மாறும் வரை அவரது முழு வாழ்க்கை பயணத்தையும் மாதவன் திரையில் காட்டியுள்ளார்.

    Advertisement

    படத்தின் டிரெய்லரிலேயே, வயதான ஜி.டி. நாயுடுவாக மாதவன் கிட்டத்தட்ட அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு Prosthetics மேக்அப் உதவியிருந்தாலும், முதுமையின் உடல்மொழியில் ஏற்படும் மாற்றம், மெதுவான நடை, அதிகம் பேசாத அமைதியான குணம் ஆகியவற்றை அவர் வெளிப்படுத்தியிருப்பதே அந்த கேரக்டரை கண் முன் எடுத்து வர உதவியது.

    இத்தகைய கேரக்டருக்கு ரெடியாகும்போது மேக்அப் போடுவதும், வசனங்களை மனப்பாடம் செய்வதும் மட்டும் போதாது. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு, கோவையின் தொழில்நுட்ப வரலாறு, அவரது புத்தகங்கள், அவருடன் பணியாற்றியவர்களின் பதிவுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆராய்ந்து, அவற்றை தனது நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன். அவர் ஜிடி நாயுடுவாகவே தெரிகிறார் என்றால் அதற்கு அவர் போட்ட கடின உழைப்பே முக்கிய காரணமாகும்!

    Advertisement

    இளம் ஜி.டி. நாயுடுவாக டீஜே அருணாசலம்

    ஜி.டி. நாயுடுவின் சிறுவயது மற்றும் இளமை காலத்தை புறக்கணித்திருந்தால், இந்த வாழ்க்கை வரலாறு முழுமை பெற முடியாது. அந்தப் பொறுப்பை நடிகர் டீஜே அருணாசலம் ஏற்றுள்ளார். மாதவனின் கதாபாத்திரம் வருவதற்கு முன், இளம் ஜி.டி. நாயுடுவாக அவர் நடித்துள்ளார்.

    இது மிகவும் பொருத்தமான தேர்வாகக் கருதப்படுகிறது. இளம் வயதிலிருந்த ஜி.டி. நாயுடுவின் தோற்றத்துக்கும், டீஜே அருணாசலத்தின் தோற்றத்துக்கும் ஒற்றுமை இயல்பாக இருப்பதால் இது பக்காவாக பொருந்தி போகிறது. இதற்கான பெருமை நடிகர் டீஜே அருணாசலத்துக்கும், படத்தின் நடிகர் தேர்வுக் குழுவிற்கும் சேரும்

    ஏன் இந்த அளவுக்கு உழைப்பு அவசியம்?

    ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் வெற்றி என்பது பார்வையாளர்கள் திரையில் ஒரு நடிகரை பார்க்கிறார்களா அல்லது உண்மையில் வாழ்ந்த மனிதரையே பார்க்கிறார்களா என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறது. அந்த நம்பிக்கை, வெறும் பிரம்மாண்டத்தால் மட்டும் உருவாகாது. ஒருவர் எப்படி நிற்கிறார், எப்படி பேசுகிறார், எப்போது அமைதியாக இருக்கிறார் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகவே உருவாகிறது.

    நம்பி நாராயணன், அஜித் தோவலை மையமாக கொண்ட கதாபாத்திரம் என தனது முந்தைய படங்களில் சாதித்த மாதவன், தற்போது ஜி.டி. நாயுடுவாக எப்படி தோன்ற போகிறார் என்பதுதான் 'GDN' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    English Summary

    From Nambi Narayanan to G.D. Naidu, R. Madhavan has built a reputation for disappearing into real-life characters(ஜிடி நாயுடு படம் குறித்து மாதவன்): All things to know about Madhavan in G.D. Naidu biopic.