மாறிய ஆட்டோ கட்டணம்.. மீட்டர் மாற்ற 6 மாதம் அவகாசம் ஓகே, அதுவரை மீட்டரை எப்படி கணக்கிடுவாங்க?

  • சென்னை: ஆட்டோவில் ஏறியதும் மீட்டரில் வரும் கட்டணத்தை பார்த்து, பணம் கொடுக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய மீட்டர்களில் புதிய கட்டணத்தை எப்படி கணக்கிடுவார்கள்? மீட்டர்களை மாற்றுவதற்கு எவ்வளவு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது? இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் ரூ.12 வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    ஆட்டோ கட்டணம்

    அதன்பிறகு பெட்ரோல் விலை உயர்வு, காப்பீட்டுக் கட்டணம், வாகனப் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்களின் விலை உயர்வு என செலவுகள் அதிகரித்தன. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடி வந்தனர்.

    ஆனால், கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பயணிகள் என 2 தரப்பினரின் நலன்களையும் சமநிலைப்படுத்தி ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என 2022 பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து, சுமார் 13 வருடங்களுக்கு பிறகு புதிய கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை இப்போது வெளியிட்டுள்ளது.

    புதிய ஆட்டோ கட்டணம் எவ்வளவு?

    புதிய கட்டணத்தின்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.50 வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்கலாம். அதேபோல், காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்துக்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டண உத்தரவை மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    மீட்டர் மாற்ற 6 மாதம் டைம்

    புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டாலும், அதற்கேற்ப ஆட்டோக்களில் உள்ள மீட்டர்களையும் மாற்ற வேண்டியுள்ளது. இதற்காக போக்குவரத்துத் துறை 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, 2027 ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆட்டோக்களில் புதிய கட்டண முறைக்கு ஏற்ப மீட்டர்களை மாற்றி அமைக்க வேண்டும்.

    அதுவரை பயணிகள் எளிதாகப் பார்க்கும் வகையில், அரசு நிர்ணயித்த புதிய கட்டண விவரங்கள் அடங்கிய பலகையை ஆட்டோவில் ஒட்ட வேண்டும்.. மீட்டர்கள் மாற்றப்படும் வரை அந்தப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தின் அடிப்படையில் பயணிகளிடம் பணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.. எனவே, ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்கள் புதிய கட்டண விவரங்களைத் தெரிந்துகொள்வதுடன், ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ள கட்டணப் பலகையையும் பார்த்து கட்டணம் செலுத்தலாம்..

    Auto rickshaw: தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு.. கிமீ-க்கு 25 ரூபாய்! ஏறி இறங்கினாலே 50 ரூபாய்!

    பழைய மீட்டர் - இது சாத்தியமா

    ஆனாலும், பழைய மீட்டர்களில் ஏற்கனவே உள்ள கட்டணக் கணக்கீட்டு முறைக்கும், புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கும் வித்தியாசம் இருப்பதால், மீட்டரை மாற்றாமல் புதிய கட்டணத்தை எப்படிக் கணக்கிடுவார்கள் என்ற கேள்வி இப்போது எழுகிறது.

    Advertisement

    மீட்டரை மாற்ற 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை பயணிகள் மீட்டரில் காட்டும் தொகையைத்தான் கொடுக்க வேண்டுமா அல்லது அரசு நிர்ணயித்த புதிய கட்டணத்தின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டுமா என்பதில் தெளிவு தேவைப்படுகிறது. இதற்காகவே ஆட்டோவில் புதிய கட்டண விவரங்கள் அடங்கிய பலகையை ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருந்தாலும், நடைமுறையில் மீட்டரில் காட்டும் தொகையையும் புதிய கட்டணத்தையும் எப்படிப் பொருத்திப் பார்ப்பார்கள், கட்டண வேறுபாடு ஏற்பட்டால் அதை எப்படிக் கையாள்வார்கள் என்பதுதான் பயணிகள் மத்தியில் எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது...!!

    English Summary

    How Will Auto Fares Be Calculated in Tamil Nadu as Drivers Get 6 Months to Change Meters?