சென்னை: 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவை நோக்கித்தான் தமிழக அரசியல் கட்சிகளின் கவனம் உள்ளது. குறிப்பாக தவெகவுக்கு இந்த தேர்தல் சாதாரண இடைத்தேர்தல் கிடையாது.. சட்டசபையில் தனது பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், இந்த 2 தொகுதிகளின் முடிவு ஆட்சியின் அடுத்தகட்ட அரசியல் கணக்கிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் முடிந்த பிறகு தவெக மேலிடத்தில் நடந்த சில முக்கிய ஆலோசனைகள் குறித்த தகவல்கள் நமக்கு எக்ஸ்ளூசிவ்வாக கிடைத்துள்ளன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
முதலில் இந்த இடைத்தேர்தல் தவெகவுக்கு ஏன் முக்கியம் என்பதை பார்ப்போம்.. இதற்கு முக்கிய காரணமே சட்டசபை மெஜாரிட்டி கணக்குதான்.. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில் தவெகவின் சொந்த பலம் அந்த எண்ணிக்கையைவிட குறைவாக இருப்பதால், கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் கணக்கு ஆட்சிக்கு முக்கியமாகிறது. இப்போது 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த 2 இடங்களிலும் தவெக வெற்றி பெற்றால் சட்டசபையில் அதன் சொந்த பலம் மேலும் அதிகரிக்கும். அதனால்தான், ஆரம்பத்திலிருந்தே இந்த இடைத்தேர்தல் வெறும் 2 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான போட்டியாக மட்டுமே பார்க்கப்படவில்லை.. சட்டசபையில் தனது ஆட்சியை எந்த அளவுக்கு உறுதியான நிலையில் வைத்திருக்க முடியும் என்பதற்கான முக்கியமான கணக்காகவும் பார்க்கப்படுகிறது. முக்கியமாக , கூட்டணி கட்சிகள் மற்றும் வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகளின் நிலைப்பாடு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதும் தவெகவுக்கு இந்த நேரத்தில் ரொம்பவே முக்கியம். அதனால், 2 தொகுதிகளின் முடிவை தவெக மேலிடம் மட்டுமல்லாமல், ஆட்சியின் அடுத்தகட்ட அரசியல் கணக்குகளோடும் இணைத்துப் பார்த்து வருகிறது. அதனால், இந்த 2 தொகுதிகளிலும் என்ன மாதிரியான முடிவு வரும் என்பது தவெகவுக்குள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக, தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும், சட்டசபை கணக்கை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் மேலிடத்தில் ஆலோசனைகள் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆலோசனையின்போதுதான், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் விஜய் கேட்டறிந்த சில விவரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.. ஓகே, இப்போது நம்முடைய எக்ஸ்க்ளூசிவ் தகவலுக்கு வருவோம்.. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரித்தாராம் முதல்வர் விஜய். 2 இரு தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி, திமுக-அதிமுக 2 கட்சிகளையும் ஒரு சேர பலகீனப்படுத்தும் வகையில் இந்த வெற்றி இருக்கும் என்று மூத்த அமைச்சர்கள் 5 பேர் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து, பல்வேறு விஷயங்கள் குறித்தும் அப்போது விவாதித்திருக்கிறார்கள். அந்த விவாதத்தின்போது, விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்மறை விமர்சனங்கள், ஆட்சிக்கான பெரும்பான்மை பற்றிய விவகாரங்கள் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, "நாம் 107 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். சபாநாயகரை கழித்து விட்டால் 106 பேர். தேர்தலில் 2 தொகுதிகளிலும் நமக்கு வெற்றி என்கிற நிலையில் நம்முடைய பலம் 108 ஆக உயரும். காங்கிரஸ் ஆதரவு 5 எம்.எல்.ஏ.க்களை கணக்கில் கொண்டால் நம் பலம் 113. இப்போதுள்ள நிலையில் 5 தொகுதிகள் காலியாக இருப்பதால் சட்டமன்ற த்தில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணுக்கை 229. இதில் மெஜாரிட்டி பலத்தை கணக்கிட்டால்...115 இடங்கள் தேவை. அந்த வகையில் காங்கிரசின் ஆதரவோடு நம்மிடம் 113 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், பாமக எம்.எல்.ஏ. க்கள் 4 பேர் ஆதரவு நமக்குக் கிடைக்கும்போது நம் பலம் 117 (108 +5+4). கம்யூனிஸ்ட்கள், பாமக ஆக, மெஜாரிட்டிக்கு தேவை 115... பாமகவை சேர்த்தால் நம்மிடம் இருக்கப்போவது 117. அதனால், கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக ஆதரவு நமக்குத் முக்கியமில்லை. இரண்டு தொகுதிகளிலும் நமக்கு வெற்றி கிடைக்காது போனாலும் கூட அதிரடியாக முடிவுகளை எடுக்கலாம். நம்முடைய அரசை விமர்சித்து அவர்கள் இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்றால், ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லி விடலாம். ஆனால், அவர்களாக விலகும் சூழலை நாம் ஏற்படுத்தக்கூடாது. அதற்கு முன்பாக, பாமகவின் ஆதரவை உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்றெல்லாம் புள்ளிவிபரங்களோடு அமைச்சர்கள் முதலமைச்சரிடம் சொன்னார்களாம்.. இதே ரீதியில் மேலும் சில விவகாரங்கள் பேசப்பட்டிருக்கிறது... இதனைத் தொடர்ந்து, "நாம் விவாதித்த விஷயங்களை மையமாக வைத்து பொது வெளியில் யாரும் பேச வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாராம் முதல்வர் விஜய்...!! ஆக, தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கும், கூட்டணி கட்சிகளுடனான உறவுக்கும் இந்த ரிசல்ட் முக்கியமானதாக உள்ளது.. இப்போது எல்லோருடைய கவனமும் அந்த 2 தொகுதிகளின் முடிவை நோக்கியே இருக்கிறது.. அதற்குப் பிறகு தவெக மேலிடத்தின் கணக்கு எந்த திசையில் நகரும் என்பதுதான் அடுத்த கேள்வி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!! - நமது சிறப்பு நிருபர் எழில்இடைத்தேர்தல் தவெகவுக்கு ஏன் முக்கியம்
3 அமைச்சர்கள் பதவி பறிப்பு? இடைத்தேர்தல் ரிசல்ட் வந்ததும் விஜய் எடுக்க போகும் அதிரடி முடிவு
2 தொகுதிகளிலும் முடிவு ?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! சரிந்த வாக்கு சதவீதம்! இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லையா?
திமுக, அதிமுக, தவெக
மெஜாரிட்டி யாருக்கு