நீட் ரத்து கோரி 11-வது நாளாக சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம்! தவெக அரசு மீதும் குற்றச்சாட்டு

  • சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக "நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம்" சார்பில் சென்னையில் 11வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், விஜய்யின் தவெக அரசு மீதும் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மாநில சுயாட்சிதான் எங்களின் கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக இருகிறோம் என்று தவெக கூறி வருகிறது. ஆனால் எதுவுமே செய்யவில்லை. அரசு எங்களுக்கு துணையாக நிற்கவில்லை என கூறினர்.

    Advertisement

    சென்னை விருகம்பாக்கத்தில் "நீட் எதிர்ப்பு கூட்டு இயக்கம்" சார்பில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

    நேற்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆபிஜித் தீப்கே ஆதரவு தெரிவித்து இருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், தவெக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். போராட்டக்காரர் புளியந்தோப்பு மோகன் என்பவர் கூறியதாவது:-

    நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 4 கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    Advertisement

    மாநில அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கல

    போராட்டக்காரர்களை அரசு துன்புறுத்துகிறது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாநில அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறோம். மாநில அரசு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும். காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதற்கு டெல்லி ஜந்தர் மந்தர் போல எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி தர வேண்டும். போராட்டத்தின் 5-வது நாளில் அரசு சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இங்கு வருகை தந்தார்.

    எங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை கனிவுடன் கேட்டார். ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. நீட்க்கு எதிராக இருக்கிறோம் என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் அப்படி உள்ளது. ஆனால் செயலில் இல்லை. நீட் தேர்வுக்கு எதிரான உணர்வு நாடு முழுவதும் பரவியுள்ளது. எனவே இந்த சூழலில் நீட் தேர்வு ரத்து விவகாரத்தை தமிழ்நாடு போன்ற மாநிலம் எழுப்ப வேண்டும்.

    Advertisement

    தவெக அரசு எங்களுக்கு துணையாக இல்லை

    அப்போதுதான் பிற மாநிலங்களும் இந்த போராட்டத்தில் இணையும். மாநில சுயாட்சிதான் எங்களின் கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக இருகிறோம் என்று தவெக கூறி வருகிறது. ஆனால் எதுவுமே செய்யவில்லை. அரசு எங்களுக்கு துணையாக நிற்கவில்லை" என்றார்.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Hunger strike in Chennai against NEET: A hunger strike against the NEET exam, organized by the "Joint Movement Against NEET," is underway in Chennai for the 11th consecutive day. Those participating in the indefinite fast also leveled accusations against Vijay's TVK. They stated that while TVK claims state autonomy as its policy and professes opposition to NEET, the party has taken no action and has not stood in support of them.