மனைவி தலையை ஃபிரிட்ஜில் வைத்த கணவர்.. அது வேற பக்கத்தில்.. போலீசிடம் சொன்ன பகீர் வார்த்தை தெரியுமா

  • சென்னை: அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை தந்து வருகிறது... இது தொடர்பான விசாரணையும் போலீசார் நடத்தி வந்தாலும், பதற்றமும, பயமும் கவுகாத்தி மக்களிடம் நீங்கவில்லை. என்ன நடந்தது?

    Advertisement

    கவுகாத்தியின் பெல்டோலா-பசிஸ்தாபூர் பகுதியில் வசித்து வருகிறார் ரியா தலுக்தார் கோஸ்வாமி என்ற பெண்.. இவரது கணவர் பெயர் ராமானுஜ் கோஸ்வாமி.. இருவருமே அங்குள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.

    Advertisement

    கவுகாத்தியின் நூன்மதி பகுதியை சேர்ந்த ரியா, ஃபேன்சி பஜாரில் உள்ள ஏசி மார்க்கெட் பகுதியில் ஒரு ரியா பொட்டிக்கில் வேலை செய்து வருகிறார்.. இவரது பெற்றோர் இருவருமே உயிருடன் இல்லை.. ஆனால் ஒரு சகோதரர் மட்டும் ரியாவுக்கு உள்ளார்..

    கசந்த காதல் வாழ்க்கை

    அதேபோல ராமானுஜ் அசாமின் துப்ரி மாவட்டம் கவுரிபூரைச் சேர்ந்தவர்... இவர் ஊபர் கேப்பில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. ரியா - ராமானுஜ் தம்பதி, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி கவுகாத்தி நரேங்கியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்பே பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். திருமணமாகி சில மாதங்கள் தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.. இதற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடிக்க ஆரம்பித்துள்ளது.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 3ம் தேதி வழக்கம்போல், இருவருக்கும் பயங்கரமான தகராறு ஏற்பட்டுள்ளது.. 2 பேருமே ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள்.. இதனால் வாக்குவாதம் நீடித்தது.. ஒரு கட்டத்தில் ராமானுஜ் ஆத்திரமடைந்து ரியாவை பலமாகி தாக்கி, மனசாட்சியே இல்லாமல் கொன்றுவிட்டார்..

    ரியாவின் அலறல் சத்தம்

    பிறகு, ராமானுஜ் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.. ஆனால் ரியாவின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தில் கேட்டுள்ளது.. அதற்கு பிறகு தம்பதி 2 பேருமே வீட்டில் இல்லாததையும் கவனித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியிருக்கிறது.. இதற்கு பிறகே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    Advertisement

    போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை செய்தபோது, அழுகிய நிலையில், தலை இல்லாத உடல் மட்டும் கிடந்தது. தலையை காணாமல் வீட்டிற்குள்யே போலீசார் தொடர்ந்து தேடினார்கள்.. இறுதியில் ஃப்ரிட்ஜுக்குள் கருப்பு பாலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது. அதனுடன் ரியாவின் சில விரல்களும் வெட்டப்பட்டிருந்ததை கண்டு போலீசார் வெலவெலத்து போனார்கள்.

    கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் "டாவ்" எனப்படும் வெட்டுக் கருவி உள்ளிட்ட தடயங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, ராமானுஜை தேடிய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஹதிகான் போலீஸ் ஸ்டேஷனில் அவரே சரணடைந்துள்ளார்.

    Advertisement

    பகீர் வாக்குமூலம்

    அப்போது ராமனுஜை போலீசார் விசாரித்தபோது, ரியாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இப்போது கொலை வரை சென்றதாகவும், ராமானுஜ் வாக்குமூலம் தந்துள்ளார்.. எனினும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதும், அதுவே கொலைக்கான முழுமையான காரணமா என்பதும் இன்னும் விசாரணையில் உள்ளது.

    ராமானுஜ் மனைவியை கொலை செய்ததை கேள்விப்பட்டு, அவரது தாயார் அஞ்சலி கோஸ்வாமி, அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தன் மகன் இப்படிப்பட்ட செயலை செய்திருப்பதை நம்ப முடியவில்லை என்று புலம்பி கொண்டேயிருக்கிறாராம்..

    இந்த வழக்கில் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராமானுஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் முழு பின்னணி, கொலை நடந்த விதம் மற்றும் காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    அடங்காத ராமானுஜ்

    ரியாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த பிறகே மரணத்தின் சரியான காரணம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார். ஆனால், மனைவியை கொன்ற ராமானுஜ் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் கூலாக இருக்கிறாராம்.. கள்ளக்காதல் என்பது 2 பேர் சம்பந்தப்பட்டது. என் மனைவி மீது மட்டும் தவறில்லை.. அவருடன் தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலன் மீதும் தவறு.. அதனால் ரியாவை போல, அந்த நபரையும் கொலை செய்வேன்" என்று சொல்லி கொண்டிருக்கிறாராம் ராமானுஜ்...!!!

    English Summary

    Husband Kept Wife’s Severed Head in the Fridge.. What Was the Shocking Thing He Told Police Immediately After?