ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில், குழந்தையை கணவரிடம் காட்டுவதற்காக வீடியோ கால் செய்துள்ளார் இளம்பெண்.. ஆனல், அந்த போன் அழைப்பை கணவர் எடுக்கவில்லை.. இதற்கே மனமுடைந்து உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார் மனைவி.. வெறும் ஒரு வீடியோ கால் தொடர்பாக ஏற்பட்ட மனவேதனை, 6 மாத குழந்தையை தாயில்லாமல் தவிக்க வைத்துள்ளது.
வாரங்கல் மாவட்டம் நெக்கொண்டா மண்டலத்தில் உள்ள பொல்லிகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. 20 வயதான இவருக்கும், மஹபூபாபாத் பகுதியைச் சேர்ந்த தனியார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வரும் பானோத் ஹுசைனுக்கும் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு அகிலா தனது குழந்தையுடன் பொல்லிகொண்டாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை அப்பாவிடம் காட்டி, அவருடன் பேச வைக்க வேண்டும் என நினைத்த அகிலா, கணவர் ஹுசைனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த நேரத்தில் ஹுசைன் வேலைக்கு சென்றிருந்தார்.. அத்துடன் டியூட்டி நேரத்தில் பிஸியாகவும் இருந்துள்ளார். இதனால் அகிலாவின் வீடியோ காலை எடுக்க முடியவில்லை.. ஆனால் கணவர் தன்னுடைய அழைப்பை எடுக்காததால் அகிலா மிகவும் மனமுடைந்து போய்விட்டாராம்.. உடனே அகிலா பெற்றோர் வீட்டிலிருந்து தனியாக மஹபூபாபாத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில், எலி பேஸ்ட்டை சாப்பிட்டு உயிரையும் மாய்த்து கொண்டு விட்டார். கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குச் சென்ற அகிலாவின் அப்பாவும், கணவர் ஹுசைனும், அவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அகிலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதுகுறித்து அகிலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அகிலாவின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம், சம்பவத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். கணவர் ஒரு வீடியோ காலை எடுக்காதது மட்டுமே இந்த விபரீதத்திற்கான காரணமா, அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் குடும்பப் பின்னணி உள்ளதா என்பதும் போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.. இப்போது அந்த 6 மாத குழந்தை தாயில்லாமல் கதறி கொண்டிருக்கிறது.!!பைனான்ஸ் கம்பெனி
வீடியோ கால் எடுக்கல
அகிலா அதிர்ச்சி முடிவு