ஒற்றை தலைமுடியால் சிக்கிய கொடூரன்.. நர்ஸை பலாத்காரம் செய்து கொன்ற பீகார் இளைஞன் கைது!

  • ஹைதராபாத்: செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பைக் மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், பெண் தூங்கி கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக நுழைந்த அந்த கொடூரன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த கொடூரன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சமீபத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த நர்ஸ் சுமார் 7 மாதங்களுக்கு முன்பு தான் ஹைதராபாத் வந்து மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் பீகாரை சேர்ந்த ஒருவனை கைது செய்தனர்.

    மெக்கானிக்

    பீகாரை சேர்ந்த அந்த நபர், 2023ம் ஆண்டு வேலைக்காக ஹைதராபாத் வந்துள்ளார். சம்பவத்துக்கு பிறகு அவர் தான் வேலை பார்த்து வந்த மெக்கானிக் கடைக்கே திரும்பிச் சென்று தூங்கியுள்ளான். இவ்வளவு பெரிய குரூரமான குற்றத்தை செய்துவிட்டு, எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அந்த நபர் படுத்து தூங்கியுள்ளான். சம்பவம் நடந்த நாளில் அவர் மது போதையில் இருந்ததாகவும் போலீசார் கூறினர்.

    குற்றம் சாட்டப்பட்டவர், உயிரிழந்த நர்ஸ் தங்கியிருந்த ரூமின் பின்புற ஜன்னல் அருகே அமைந்துள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். சுமார் ஒரு மாதமாகவே ஜன்னல் வழியாக அந்த பெண்ணை கவனித்த அவர், அதன் பிறகு அவரது நடமாட்டங்களை கண்காணித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    என்ன நடந்தது

    சம்பவத்தன்று பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்த அந்த கொடூரன், அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அதே ஜன்னல் வழியாக வெளியேறி மெக்கானிக் கடைக்கு திரும்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் மேலும் கூறுகையில், "அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்தபோது அந்தப் பெண் உயிருடன் இருந்தாரா என்பதை உறுதியாக கூறுவது கடினம்! அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை நடந்தபோது அந் பெண் மயக்க நிலையில் இருந்ததாக கூறினார்" என்றார்.

    போலீஸ் தகவல்

    சம்பவம் நடந்த நாளில் நர்ஸ்ஸை அவரது நண்பர் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும் நீண்ட நேரம் ஆகியும் அவர் பதிலளிக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து அவரது ரூமிற்கு சென்றுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாக உள்ளே சென்றபோது அந்த பெண் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    முதலில் கொலை வழக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகு பாலியல் வன்கொடுமை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தலைமுடி

    சந்தேகத்தின் அடிப்படையில் மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், ஆரம்பத்தில் அந்த நபர் குற்றத்தை மறுத்துள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் மீதே சந்தேகம் வலுத்துள்ளது. அதன் பிறகே போலீசடாரிடம் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். சம்பவ இடத்தில் அந்த மெக்கானிக்கின் தலைமுடி இருந்துள்ளது. அதுவே முக்கிய ஆதாரமாக மாறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English Summary

    A bike mechanic has been arrested in Hyderabad for allegedly strangling her to death(ஹைதராபாத் நர்ஸ் படுகொலை): Hyderabad Nurse assault Murder latest news in tamil.