சென்னை: ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த ரூ. 38,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட முதலீடு, ஆந்திர மாநிலத்திற்குச் செல்லக்கூடும் என்ற சூழல் நிலவிவரும் நிலையில், இது குறித்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்றும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரிய நாட்டின் பிரபல ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த ரூ. 38000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட முதலீடு, இப்போதுஆந்திர மாநிலத்திற்குச் செல்லக்கூடும் என்ற நிலைமை வந்துள்ளது..
தமிழகத்தில் 1990-களில் இருந்தே முதலீடு செய்து வரும் இந்த நிறுவனம், இப்போது அண்டை மாநில பேச்சுவார்த்தைக்குச் சென்றிருப்பது அரசின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகினற்ன. அதிலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட "கைடன்ஸ் தமிழ்நாடு" (Guidance TN) நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காததே இந்த முதலீட்டு அச்சுறுத்தலுக்கு முக்கியக் காரணம் என்று அக்கட்சி பகிரங்கமாகவே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.. இது சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதற்கு காரணம், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி முதலீடு பக்கத்து மாநிலத்திற்கு சென்றால், அது ஆளுங்கட்சியின் நிர்வாக திறமைக்கு ஏற்படும் பெரும் பின்னடைவாக மாறும் என்பதால், அதிமுக இந்த விஷயத்தை கையிலெடுத்துள்ளது.. ஒருவேளை இந்த முதலீடு கைநழுவிப் போனால் தமிழக இளைஞர்களுக்கான பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் பறிபோகும், அதனால் அரசு உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்துடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பதே அதிமுகவின் வலியுறுத்தலாக உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தை ஃபாஸ்ட்-ட்ராக்) நடைமுறைக்குக் கொண்டு வந்து தமிழ்நாட்டிற்கான முதலீட்டை உடனே உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். இருந்தாலும் இதன் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகவும், விமர்சகர்கள் கூறுகிறார்கள்.. அதாவது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தவெக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதே அதிமுக இப்படியொரு காய்நகர்த்தலை துவங்கி உள்ளதாம்.. அந்தவகையில், இந்த ஹ|ஹூண்டாய் பிரச்சனையை வலுவான ஆயுதமாக அதிமுக பயன்படுத்த முனைவதாதக கருத்து கூறுகிறார்கள். இதோ இதுதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை.. அதில் உள்ளதாவது: "அதில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு மூலக் காரணம், அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்! Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா? Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.ஹூண்டாய் முதலீடு - கை நழுவிய நிறுவனம்
தவெக அரசு தோல்வி?
அதிமுக ஆட்சி துவங்கிய நிறுவனம்
இன்னொரு ரீல்?