உண்மையை சொல்ல தைரியம் இல்லை.. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்


  • சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்நிலையில் தான் படத்தின் இயக்குநர் எச் வினோத்திடம் 'ஜனநாயகன் ரிலீசை எப்போது எதிர்பார்க்கலாம்'' என்ற கேள்விக்கு அவர் நொந்துபோய் சொன்ன பதில் ரசிகர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் வென்று முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். இவர் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடித்த திரைப்படம் தான் 'ஜனநாயகன்'. அரசியல் ஆர்வத்தால் 'ஜனநாயகன்' தான் தனது கடைசி திரைப்படம் என்று விஜய் அறிவித்தார்.

    Advertisement

    இந்த ‛ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீசாகவில்லை.

    படத்துக்கான ‛சென்சார்' சான்று கிடைக்காததால் தேதி குறிப்பிடாமல் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்கள் ஆகியும் கூட இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை.

    இதற்கிடையே தான் நடிகர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்த விஜய் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார். இது ஒருபுறம் இருக்க விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் எச். வினோத் தனியார் சேனலுக்கு இண்டர்வியூ ஒன்றை கொடுத்தார். அந்த இண்டர்வியூவில் இயக்குநர் எச் வினோத்திடம் ஜனநாயகன் திரைப்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

    இதுதொடர்பாக எச் வினோத்திடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ''உங்களிடம் இந்த கேள்வியை தமிழ்நாடே கேட்டு இருக்கும். நானும் உங்களிடம் கேட்கிறேன். ஜனநாயகன் ரிலீஸ் எப்போது எதிர்பார்க்கலாம்?'' என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எச் வினோத், ''இல்லை.. அது நம்மிடம் இல்லை. அதில் உள்ள உண்மையை சொல்கிற அளவுக்கு என்னிடம் தைரியம் இல்லை. அதனை சொல்லும் தைரியம் வந்தாலும் அதனை போடும் தைரியம் உங்களுக்கு இல்லை. அவ்வளவு தான்'' என்று சிரித்தார். அதன்பிறகு எச் வினோத், ''அதனால் வரும்போது பார்ப்போம்'' என்று நொந்துப்போய் கூறினார்.

    Advertisement

    இதுதொடர்பாக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எச் வினோத்தின் இந்த பதில் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளதோடு, 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக இன்னும் அதிக காலம் எடுக்குமா? என சமூக வலைதளங்களில் கவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

    English Summary

    Director H Vinoth About Jana Nayagan: Jana nayagan -the final film starring "Chief Minister" Vijay-has yet to be released. Its release continues to be delayed due to the inability to obtain a censor certificate. Against this backdrop, when the film's director, H. Vinoth, was asked, "When can we expect the release of Jananayagan?", his disheartened response has left fans deeply concerned.