இந்திய விமானியை காப்பாற்ற 45 நிமிடம் போராடினேன்.. பிளை துபாய் விமானத்தில் பயணித்த பல் டாக்டர்

  • சென்னை: ஓமன் துணை விமானியின் பிளானை தவிடுபொடியாக்கிய இந்திய விமானியை காப்பாற்ற தொடர்ந்து 45 நிமிடங்கள் போராடியதாக விமானத்தில் பயணித்த இஸ்ரேலை சேர்ந்த பல் மருத்துவர் தெரிவித்துள்ளார். காக்பிட் அறையை திறந்த போது, விமானி ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது தலை மற்றும் இடது கையில் ஆழமான காயங்கள் இருந்தன. ரத்தம் வந்துகொண்டே இருந்தது எனவும், தயவு செய்து எனக்கு உதவுங்கள். நான் உயிர்வாழ விரும்புகிறேன் என இந்திய விமானி கூறியதாகவும் பல் மருத்துவர் கூறியுள்ளார்.

    Advertisement

    கடந்த மாதம் 30 ஆம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பிளை துபாய் விமானத்தை, விமானத்தில் இருந்த துணை விமானி அல் ஹம்மாமி கடத்த முயன்றார். இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கோடாரியால் கொடூரமாக தாக்கிவிட்டு, விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயன்ற அல் ஹமாமியின் முயற்சியை ஸ்மித் மச்சார் முறியடித்தார்.

    Advertisement

    அதிக அளவு ரத்தம் வெளியேறியது

    படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய போதும் காக்பிட் அறையை திறந்துவிட்டு விமான பயணிகளை காப்பாறினார். காக்பிட் அறையை திறந்ததும் பயணிகள் உள்ளே வந்து ஓமன் நாட்டை சேர்ந்த விமானியை கட்டிப்போட்டு விமானத்தை பத்திரமாக காப்பாற்றினார். இந்த சம்பவத்தின் போது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை இஸ்ரேலை சேர்ந்த பல் மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

    பிளம்பர் டூ பல் மருத்துவர் வரை.. பிளை துபாய் விமானத்தில் இந்திய விமானிக்கு உதவிய 4 சக பயணிகள்!
    Advertisement

    இவர் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். பல் மருத்துவர் ஷோட்டா முசேவ் (வயது 47) கூறியதாவது:- காயமடைந்த இந்திய விமானிக்கு 45 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி அளித்தேன். விமானி ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது தலை மற்றும் இடது கையில் ஆழமான காயங்கள் இருந்தன. அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், சட்டையை வைத்து காயங்களை அழுத்திப் பிடித்தேன்.

    நாடித்துடிப்பு குறைந்தது

    ரத்தப்போக்கு நிற்காததால் பனிக்கட்டிகளை வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்தேன். விமானி சுயநினைவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவரிடம் தொடர்ந்து பேசினேன். தூங்கிவிடாதீர்கள். எங்களுக்கு நீங்கள் தேவை. நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்வீர்கள்" என்று கூறி ஆறுதல் அளித்தேன். அவர், தயவு செய்து எனக்கு உதவுங்கள். நான் உயிர்வாழ விரும்புகிறேன். இங்கே இறக்க விரும்பவில்லை என்று கூறினார்.

    Advertisement
    காசாவிற்காக உயிர் தியாகம்.. விசாரணையில் ஓமன் துணை விமானி வாக்குமூலம் - பகீர் தகவல்

    அவரது தலை மிகவும் வலிப்பதாகவும் கூறினார். ஒரு கட்டத்தில் அவரது நாடித்துடிப்பு மிகவும் குறைந்தது. அவரது கால்களை உயர்த்தி வைத்ததும் நாடித்துடிப்பு மீண்டும் வந்தது. பின்னர் அவரது உதடுகள் நீல நிறமாக மாறியதால், விரைவாக தரையிறங்க வேண்டும். அவருக்கு அதிக நேரம் இல்லை என்று விமான பணியாளர்களிடம் கூறினேன்" என்றார்.

    கண்பார்வை மங்கியது

    இந்திய விமானி ஸ்மித் மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தி குத்து தாக்குதலில் அவருக்கு மண்டை ஓடு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதிக ரத்த போக்கு மற்றும் மண்டை ஓடு உடைந்ததால், தற்காலிகமாக கண் பார்வை மங்கியதாகவும், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    English Summary

    An Israeli dentist who was a passenger on the flight has stated that he fought for 45 minutes to save the Indian pilot, who had thwarted the Omani co-pilot's plan. When the cockpit door was opened, Pilot Smith Machar was found lying in a pool of blood; he had sustained deep wounds to his head and left arm. The dentist recounted that the pilot was bleeding profusely and pleaded, "Please help me; I want to live."