“ஸ்டாலின் சார் 1000 கோடி செலவு பண்ணாருனு நானும் AI வீடியோ போடுறேன்.. பார்க்குறீங்களா?”- ஆதவ் அர்ஜுனா

  • சென்னை: "நானும் நாளை காலை ஸ்டாலின் சார் 1000 கோடி செலவு பண்ணாருனு AI வீடியோ போடுவேன்.. பார்க்குறீங்களா?" என தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா வீடியோ குறித்த கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் கொடுத்துள்ளார்.

    Advertisement

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் அதிமுகவில் இருந்து விலகினார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

    Advertisement

    கட்சி தாவி மீண்டும் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தவெகவில் இணைந்தது குறித்து வேதனையுடன் சத்தியபாமா பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

    கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவழித்ததாகவும், இந்த முறை அமைச்சர்கள் தங்குவதற்கு ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா பேசியது போன்ற வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ஆஸ்டின் இன்று புகார் அளித்தார்.

    Advertisement

    இந்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள், தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசியதாக பரவும் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, "எல்லாம் AI. நானும் நாளை காலையில் ஸ்டாலின் சார் 1000 கோடி செலவு பண்ணாருனு ஏஐ வீடியோ போடுவேன்.. பார்க்குறீங்களா?" என்றார். மேலும், வாக்குப்பதிவுக்கு முன்பாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே திமுக இத்தகைய சதியில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

    English Summary

    Minister Aadhav Arjuna responded to a question regarding the video featuring Dharapuram TVK candidate Sathyabama by saying, “Tomorrow morning, I too will release an AI video claiming Stalin Sir spent ₹1,000 crore.”