கரூர் சம்பவம் முதலாண்டு நினைவு நாள்.. தீராத வலி.. சொல்ல முடியாத சோகம்.. விஜய் உருக்கம்

  • சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் தவெக தலைவர் பேசினார். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அந்த சம்பவத்தில் தவெக மற்றும் விஜயின் செயல்பாடு பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தீராத வலியுடன், சொல்ல முடியாத சோகங்களை சுமந்து நிற்கிறோம் என்று கரூர் சம்பவம் குறித்து விஜய் கூறியுள்ளார்.

    Advertisement

    2025 செப்டம்பர் 27. வரலாற்றில் மறக்க முடியாத சோக நாள். கரூர் வேலுச்சாமிபுரம் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. விஜயை காண கட்டுக்கடங்காத கூட்டம் முட்டி தள்ளியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த துயர சம்பவத்தில் 41 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியுது. தவெக சார்பில் கூட்டத்தை முறையாக ஒருங்கிணைக்காதது, விஜய் தாமதமாக வந்தது, காவல்துறை பாதுகாப்பு வழங்காதது என பல்வேறு காரணங்கள் புகார் சொல்லப்பட்டது.

    Advertisement

    சொல்ல முடியாத சோகத்துடன்

    அப்போதைய திமுக ஆட்சி மீது விஜய் பல்வேறு புகார்களை வைத்தார். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக கரூர் சென்று சந்திக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து ஆறுதல் கூறினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கரூர் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கினார்.

    முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள்.. அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்.

    Advertisement

    நினைவு சின்னம்

    நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி" என்று கூறியுள்ளார். விஜயின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரூரில் தவெக சார்பில் இன்று முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 41 பேரின் நினைவாக வேலுச்சாமிபுரத்தில் நினைவு சின்னம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    English Summary

    Today is the first year anniversary of Karur stampede. Iam standing with lots of pain said CM Vijay on is X page.