வேலூரில் ஐஏஸ் - ஐபிஎஸ் தம்பதிக்கு ஒரே மாவட்டத்தில் பணி.. கணவர் எஸ்பி - மனைவி மாநகாரட்சி ஆணையர்

  • சென்னை: வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரின் சரண்யா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இவரது கணவரும் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) சிவராமன் ஐபிஎஸ் பணியாற்றி வரும் நிலையில், வேலூர் மாநகராட்சி ஆணையராக அவரது மனைவியான கேத்ரின் சரண்யா ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் நேற்று ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சட்டசபை கூட்டம் நேற்று முடிந்த நிலையில், நேற்று இரவே இந்த அதிகாரிகள் மாற்றம் தொடர்பான உத்தரவு வெளியானது. மொத்தம் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    Advertisement

    கணவன் - மனைவி

    குறிப்பாக பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார். கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் இன்னெசண்ட் திவ்யா, பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல, வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரின் சரண்யா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

    இவர் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக இருந்த நிலையில் வேலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவரது கணவரும் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) சிவராமன் ஐபிஎஸ் பணியாற்றி வரும் நிலையில், வேலூர் மாநகராட்சி ஆணையராக அவரது மனைவியான கேத்ரின் சரண்யா ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    Advertisement

    இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

    இதன் மூலம் கணவனும் மனைவியும் ஒரே மாநகராட்சியில் பணியாற்ற உள்ளனர். கணவர் வேலூர் எஸ்பியாகவும் மனைவி வேலூர் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்ற உள்ளனர்.

    வேலூர் மாநகராட்சியாக கடந்த 2008 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் ஆணையராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி கேத்ரின் சரண்யாவே ஆவார். வேலூர் மாவட்ட எஸ்பியாக கடந்த பிப்ரவரி மாதம் சிவராமன் நியமனம் செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகரியான என். சிவராமன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கேத்ரின் சரண்யாவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான். 2021ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகரியான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். எம்.எஸ்.சி கணிதம் படித்துள்ளார்.

    English Summary

    IAS-IPS couple: Catherine Saranya (IAS) has been appointed as the Commissioner of Vellore Corporation. Her husband is also an IPS officer. While Sivaraman (IPS) is currently serving as the Superintendent of Police (SP) for Vellore district, his wife, Catherine Saranya (IAS), is set to assume office as the Vellore Corporation Commissioner.