தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! சென்னை மாநகராட்சி கமிஷனரை நினைவிருக்கா? அவருக்கு என்ன துறை?

  • சென்னை: தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட இது போல் அதிகாரிகளை ஒவ்வொரு அரசும் மாற்றம் செய்யும்.

    Advertisement

    அந்த வகையில் இன்று 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே ஐஏஎஸ் அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டனர்.

    அந்த வகையில் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக மாற்றப்பட்டார். திட்ட வளர்ச்சித் துறை செயலாளராக சந்தியா வேணுகோபால் சர்மா, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக ஸ்வர்ணா, தொழில்துறை, முதலீடு ஊக்குவிப்புத் துறை சிறப்பு செயலாளராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அது போல் அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ், வருவாய், நிர்வாகத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    ஜவுளித் துறை ஆணையராக ஷோபனா, தொழிலாளர் நலத் துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ், மீன்வளத் துறை இயக்குநராக விஜய கார்த்திகேயன், நகர திட்டத் துறை ஆணையராக கிரண் குராலா, சமூகநலத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநராக ஆஷா அஜீத், நில அளவைத் துறை இயக்குநராக கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    More than 10 IAS officers have been transferred in a major administrative reshuffle in Tamil Nadu. Kumaragurubaran, who previously served as the Commissioner of the Greater Chennai Corporation, has now been appointed as the Secretary of the Commercial Taxes Department.