ஐசிஐசிஐ தனிநபர் கடன் ரூ.13.75 லட்சம்.. வாங்காத கடனுக்கு ஓயாமல் மெசேஜ்! நுகர்வோர் கோர்ட் வைத்த குட்டு

  • சென்னை: தனிநபர் கடன் வாங்கப் போறீங்களா? அவசர தேவைக்கு உதவும் இந்த கடனை வாங்குவதில் சில முக்கியமான சாதகங்கள் உள்ளன. ஆனால், வாடிக்கையாளரின் அனுமதியே இல்லாமல் ரூ.13.75 லட்சம் கடன் வழங்கிய விவகாரத்தில், சென்னையில் உள்ள ஒரு வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் என்ன உத்தரவு போட்டுள்ளது தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    திடீரென மருத்துவ செலவு வந்துவிட்டது அல்லது வீட்டில் ஏதாவது எமர்ஜென்சி தேவை ஏற்பட்டுவிட்டது அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவு என பணம் தேவைப்படும் நேரங்களில் பலரும் வங்கிகளில் தனிநபர் கடன் வாங்குகிறார்கள்.

    Advertisement

    இதற்காக நிலம், வீடு என எந்த சொத்தையும் அடமானம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய வருமானம், கடன் திருப்பி செலுத்தும் தகுதி ஆகியவற்றை பொறுத்து வங்கிகள் கடன் வழங்கும். தனிநபர் கடனின் முக்கியமான சாதகம், அவசர தேவைக்கு விரைவாக பணம் கிடைக்கலாம் என்பதுதான். அந்த பணத்தை மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

    பொதுவாக, எதுக்காக பணம் செலவிடப்படுகிறது என்பதற்காக சொத்து அடமானம் வைக்க வேண்டியதில்லை. ஆனால், வட்டி விகிதம், செயலாக்க கட்டணம், மாத தவணை போன்றவற்றை கவனமாக பார்த்துத்தான் கடன் வாங்க வேண்டும். வாங்கிய கடனை தவறாமல் திருப்பி செலுத்துவதும் முக்கியம்.

    Advertisement

    தனிநபர் கடன் அவசியம்

    இப்படித் தனிநபர் கடன் வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவர் கடனே கேட்காமல், அவருடைய அனுமதியும் இல்லாமல் வங்கியே கடன் கொடுத்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கான ரூபாய் வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு சென்றுவிட்டால்?? அப்படியொரு விவகாரம்தான் சென்னையில் நடந்து கோர்ட் வரை போயிருக்கிறது.. வங்கியின் செயல்பாட்டை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த நிஹ்மத்துல்லா என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

    அந்த மனுவில், "ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், 2023ம் ஆண்டு, என்னுடைய அனுமதியின்றி 13.75 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் அனுமதித்தது. பின், அதில் இருந்து 9.50 லட்சம் ரூபாயை, உடனே வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியது. அதன்பின், கடனை திரும்ப செலுத்துமாறு, வங்கி நிர்வாகம் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியது. இந்த விவகாரத்தில் தவறான நடைமுறையை மேற்கொண்ட வங்கி நிர்வாகம், இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    Advertisement

    இந்த புகாரை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடன் வழங்கப்பட்ட விதம் குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டது.

    அத்துடன் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், "வங்கி நிர்வாகம் ஒரே நாளில் கடன் ஒப்புதல் அளித்துள்ளது. 13.75 லட்சம் ரூபாய் கடன் அனுமதித்த வகையிலும், அதில் இருந்து 9.50 லட்சம் ரூபாயை உடனே எடுக்கப்பட்டதைத் தடுக்கவும், வங்கி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரிகிறது.

    வங்கி சேவை குறைபாடு

    இதன்வாயிலாக வங்கி சேவையில் குறைபாடு இருப்பதாக ஆணையம் தீர்மானிக்கிறது. எனவே, சர்ச்சைக்குரிய கடன் கணக்கை முடித்து, அதற்கான சான்றிதழை மனுதாரருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். சேவையில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு இழப்பீடாக 50 ஆயிரமும், வழக்கு செலவுக்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    அதாவது, தனிநபர் கடன் என்பது அவசர தேவைகளுக்கு உதவக்கூடியது என்றாலும், வங்கிகள் கடன் வழங்கும்போது உரிய நடைமுறைகளை பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது...!!

    English Summary

    ICICI Bank Personal Loan: Rs 13.75 Lakh Without Consent? Repeated SMS and Consumer Court's Strong Order