சீமானுக்கு திமுக ஆதரவு கொடுத்தால்.. 2029ல் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஸ்டாலின்?

  • சென்னை: அம்பை தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பேசலாம் என்று ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதனால் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அம்பை தொகுதியில் சீமானுக்கு ஆதரவு அளிக்குமா என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. பின்னர் பேசலாம் என்று பதில் அளித்து சென்றார்.

    Advertisement

    முன்னதாகவே அம்பை தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகியது. விசிக தலைவர் திருமாவளவனும் கூட, பெரியாரை சாடியவர்களை கூட பொது வேட்பாளராக நிறுத்த போவதாக செய்திகள் வருகின்றன என்று கூறி இருந்தார். தற்போது ஸ்டாலினின் பதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    நெல்லையை பொறுத்தவரை அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டுமே திமுக கொஞ்சம் வலிமை குறைந்து இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தலில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை களமிறக்கி பணியாற்றினால், அம்பாசமுத்திரத்தில் எளிதாக வெற்றிக்கு அருகில் வர முடியும். அங்கும் கூட கட்டமைப்பு ரீதியாக திமுக வலுவாக உள்ளது.

    Advertisement

    ஆனால் 2029 லோக்சபா தேர்தலுக்குள் திமுக புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரதமர் வேட்பாளர் இல்லாமல் திமுக களமிறங்கும் போது, அது கூடுதல் சிக்கலாகும். தவெக - காங்கிரஸ், அதிமுக - பாஜக என்று கூட்டணி அமைக்கும் போது, திமுக தனித்து களமிறங்கினால், 3வது இடத்திற்கு தள்ளப்படலாம். தனித்து நின்று வெற்றி பெறுவதற்கான சூழல் அமையுமா என்பதும் சந்தேகம் தான்.

    இதனால் அம்பை தொகுதியில் சீமானுக்கு ஆதரவு அளித்தால், நாதக மற்றும் திமுக இடையில் நெருக்கம் உருவாகக் கூடும். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் மற்றும் பாஜக என்று இரு கட்சிகளுக்கு எதிராக திமுக, நாதக களமாடி வருகிறது. இதனால் பெரியார் எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை கைவிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் தவெக எதிர்ப்பை திமுக, நாதக இணைந்து கையில் எடுத்தால், வெல்லும் வாய்ப்பு உருவாகும்.

    Advertisement

    ஏற்கனவே நாதக நிர்வாகிகள் கூட்டணிக்கு செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அதனை பயன்படுத்தி கொள்ள திமுக தலைமை கருதுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனால் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English Summary

    If DMK Supports Seeman: Is Stalin Laying the Groundwork for a New Alliance Ahead of 2029?