பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு

  • சென்னை: முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி ஒருவேளை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புகளை இழக்க நேரிடும் - இதில் விமான நிலையம், ₹15,906 கோடி மதிப்பிலான மெட்ரோ இணைப்பு, விரைவுச்சாலை இணைப்பு, ஏரோசிட்டி, லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் மேற்கு சென்னையை இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதார மண்டலமாக மாற்றக்கூடிய அசுர வேலைவாய்ப்பு உருவாக்கம் என அனைத்தும் முடங்கிப்போகும் அபாயம் உள்ளதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

    Advertisement

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத்துக்காக திட்டமிடப்பட்ட மொத்த முதலீடு ₹20,000 முதல் ₹32,700 கோடி. 2 ரன்வேக்கள், பிரம்மாண்டமான கார்ஹோ ஹப், ஏரோசிட்டி-னு வருஷத்துக்கு 10 கோடி பயணிகளைக் கையாளுற அளவுக்குப் பெரிய பிளான் இது. இதோட சேர்ந்து, பூந்தமல்லியில இருந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியா பரந்தூர் வரைக்கும் ₹15,906 கோடியில் 53 கிலோமீட்டர் நீளத்துக்கு 20 ஸ்டேஷன்களோட சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும் திட்டம் ரெடியாகி, ஆரம்பக்கட்ட நிலம் கையகப்படுத்துற வேலைகளுக்கு ₹2,126 கோடியும் ஒதுக்கப்பட்டது. சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே கனெக்டிவிட்டியோட, இந்த ஏரியாவையே இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதார மண்டலமாக மாத்துறதுதான் இதோட நோக்கம்.

    Advertisement

    ஒருவேளை முதல்வர் விஜய்யால் இந்த ஏர்போர்ட் ப்ராஜெக்ட் டிராப் ஆனால், ஏர்போர்ட், மெட்ரோ, ஏரோசிட்டி, லாஜிஸ்டிக்ஸ் ஹப், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்னு தமிழ்நாடு மொத்தம் ₹50,000 கோடிக்கும் அதிகமான மெகா உள்கட்டமைப்பு முதலீடுகளை மொத்தமாக இழக்க வேண்டியிருக்கும்.

    இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "• பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம்: திட்டமிடப்பட்ட மொத்த முதலீடு சுமார் ₹20,000 முதல் ₹32,700 கோடி. இதில் 2 பிரம்மாண்ட ஓடுதளங்கள் (Runways), சரக்கு போக்குவரத்து மையம், ஏரோசிட்டி (AeroCity) மற்றும் வருஷத்துக்கு 10 கோடி பயணிகளைக் கையாளுற அளவுக்குப் பெரிய வசதிகள் அமையவிருக்கு.

    Advertisement

    • பரந்தூர் வரை மெட்ரோ ரயில்: பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்தை இணைக்க ₹15,906 கோடி செலவில், 53 கிலோமீட்டர் நீளத்துக்கு 20 ஸ்டேஷன்களுடன் கூடிய புதிய மெட்ரோ பாதைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஆரம்பக்கட்ட மெட்ரோ பணிகள்: இதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆரம்பகட்ட சிவில் வேலைகளுக்காக ₹2,126 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்டாச்சு.

    • பொருளாதார மண்டலம்: சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே (விரைவுச்சாலை) இணைப்போடு சேர்த்து, இந்த விமான நிலையப் பகுதியைச் சுற்றி புதிய பசுமைப் பாதைகள் உருவாக்கப்படும். இது சென்னையின் மேற்குப் பகுதியை ஒரு மிகப்பெரிய தொழில் மற்றும் வணிக மையமாக மாற்றும்.

    Advertisement

    • முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும்: ஸ்ரீபெரும்புதூர் முதல் பரந்தூர் வரையிலான பகுதிகள்ல அமையப்போற ஏரோசிட்டி, லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூலமா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தனியார் முதலீடுகளும், நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்னு எதிர்பார்க்கப்படுது.

    நாம் இழக்கப்போகும் ஆபத்து என்ன?

    ஒருவேளை இந்த பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், தமிழ்நாடு ₹50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களை மொத்தமாக இழக்க வேண்டியிருக்கும். இதில் விமான நிலையம், ₹15,906 கோடி மெட்ரோ இணைப்பு, எக்ஸ்பிரஸ்வே கனெக்டிவிட்டி, ஏரோசிட்டி, லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் என அனைத்தும் முடங்கிப்போகும். முக்கியமா, மேற்கு சென்னையை இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதார மண்டலமாக மாற்றி, நம்ம எதிர்காலத் தலைமுறைக்குக் கிடைக்க வேண்டிய அசுர வேலைவாய்ப்புகளும் கைநழுவிப் போகும் அபாயம் இருக்கிறது" என்று நெட்டிசன் கூறியுள்ளார்.

    English Summary

    If Parandur Airport is dropped, Tamil Nadu risks losing ₹50,000+ crore worth of planned infrastructure — including the airport, ₹15,906 crore metro link, expressway connectivity, AeroCity, logistics hubs, and massive job creation that could transform western Chennai into India’s next economic corridor.