'அரசியல் ஊடாடாவிடில் அடுத்தாண்டு உனக்குத்தான்'.. கமல்ஹாசனுக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

  • நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் நடிகர் - இயக்குநர், கதாசிரியர் - வசனகர்த்தா, பாடகர் - பாடலாசிரியர், தயாரிப்பாளர் - தலைவர் என பரிணாமம் எடுத்த கமலுக்கு அரசியல் ஊடாடாவிடில் அடுத்தாண்டு உனக்குத்தான் என்று வைரமுத்து வாழ்த்தி உள்ளார்.

    Advertisement

    வைரமுத்து வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,

    Advertisement

    "நவம்பர் ஏழு
    நாயகன் பிறந்தநாள்

    தமிழ்நாட்டின்
    பெருமிதங்களுள் ஒன்று
    பத்மபூஷண் கமல்ஹாசன்

    எந்தப் பூவை
    நினைந்து நுகர்ந்தாலும்
    அந்தப் பூவின்
    வாசம் வீசுமாம்
    மனோரஞ்சிதம்

    நடிகர் - இயக்குநர்
    கதாசிரியர் - வசனகர்த்தா
    பாடகர் - பாடலாசிரியர்
    தயாரிப்பாளர் - தலைவர்
    என்ற
    பரிமாணங்களின் பரிணாமம்
    கமல்ஹாசன்

    உடலென்ற ஒருபொருளை
    இரும்பாய் - ரப்பராய்
    கல்லாய் - களிமண்ணாய்
    மடைமாற்றும் மாகலைஞன்

    தாதா சாகேப் விருதுக்குப்
    பெருந்தகுதி பெற்றார்
    உன்னிலும் எவருண்டு?

    அரசியல் ஊடாடாவிடில்
    அடுத்தாண்டு உனக்குத்தான்

    தர்மம் வெற்றிபெறட்டும்;
    தர்மனும் வெற்றிபெறட்டும்

    வாழ்க நண்பரே!" இவ்வாறு கூறியுள்ளார்.

    முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பிற்கினிய கமல்ஹாசனுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்த நாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி புதிய படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் 237வது படத்திற்கு சண்டியர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'சண்டியர்' பெயரை கமல்ஹாசன் வைத்துள்ளார். விரும்பாண்டியில் விட்டதை இப்போது வைத்துள்ளார்.

    English Summary

    'If politics doesn't get in the way, next year belongs to you' – Vairamuthu's birthday wishes to Kamal Haasan