“நீ பிஜேபி என்றால் நான் சிஜேபி” - திருமாவளவன் சொன்னதை கவனிச்சிங்களா! ட்விஸ்ட் வைத்த விசிக

  • சென்னை: கரப்பான் ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார். இந்நிலையில், சிஜேபி அமைப்பின் போராட்டத்தை குறிப்பிட்டு, பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் பேசியிருக்கும் விஷயம் கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    இது குறித்து திருமாவளவன் பேசியதாவது, "யாராலும் அழிக்க முடியாது என்று இறுமாப்போடு இருந்தவர்கள், தற்போது வளைக்கப்பட்டுவிட்டார்கள். பணிய மாட்டோம் என்று சொன்னவர்கள்.. பணிந்துவிட்டார்கள். அசைத்து கூட பார்க்க முடியாது என்று சொல்பட்டவர்கள்.. அசைக்கப்பட்டுவிட்டார்கள். இது புதிய வரலாறு.

    Advertisement

    இதை யார் சாதித்தார்கள் என்பதல்ல.. இதனால், யாருக்கும் புகழ் கிடைக்கும் என்பதோ, யாருக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்பதோ பிரச்சனை அல்ல. தொடர்ந்து 3வது முறையாக வெற்றிப்பெற்ற பாஜக, எங்களுக்க எதிரிகளே இல்லை என்று சொன்ன பாஜக.. காங்கிரஸும் பலவீனமடைந்துவிட்டது, மாநில அரசுகளும் காணாமல் போய்விட்டன என்று நினைத்த பாஜகவின் ஆட்சியாளர்கள் இன்றைக்கு சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டிக்கிறார்கள். காலம்தான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

    அரசியலை பொறுத்தவரை நாம் தீர்மானித்த எதிரிகளால்தான் தோல்வியை தழுவுவோம் என்று கிடையாது. நம்மால் தீர்மானிக்க முடியாதவர்களாலும் நாம் தோல்வியடையலாம். இதுதான் காலம் நமக்கு சொல்லும் படிப்பினை.

    Advertisement

    திமுகவை, அதிமுகவும்.. அதிமுகவை, திமுகதான் வீழ்த்தும் என்று மரபு வழி சிந்தித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இடையில், இரண்டு கட்சிகளையும் இன்னொரு கட்சி வந்து வீழ்த்தும் என்று தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கிறது.

    அப்படித்தான் பாஜகவை, காங்கிரஸ்தான் பலவீனப்படுத்தும்.. அந்த காங்கிரஸ் பாஜகவை பலவீனப்படுத்தும் அளவுக்கு வலிமை பெற்றிருக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த பாஜகவுக்கு.. நீ 'பிஜேபி' என்றால் நான் 'சிஜேபி' என்று பெரிய இயக்கம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயரால் உருவாகியிருக்கிறது.

    வேலையில்லா இளைஞர்கள், சோஷியல் மீடியாக்களில் ஆர்வம் காட்டுகிற இளைஞர்கள்.. இவர்கள் தருகிற தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் கரப்பான் பூச்சிகள் என்று சொல்லப் போய்.. ஆமாம் நாங்கள் கரப்பான் பூச்சிகள் ஒன்று சேர்ந்தால்.. நாடாளுமன்ற கட்டிடத்தையே புரட்டி போட முடியும் என்பதை இன்று உறுதிப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Thirumavalavan: Union Education Minister Dharmendra Pradhan has resigned following the protest by the Karappan Janata Party (CJP). Amidst this, remarks made by Thirumavalavan against the BJP, referencing the CJP's protest, have drawn attention.