தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்

  • சென்னை: தமிழக மின்சார வாரியம் பொது மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. நுகர்வோரின் வசதிக்காக அபராதங்களைத் தவிர்த்து மின் கட்டணத்தை எளிதாகச் செலுத்த பெடரல் வங்கியுடன் இணைந்து புதிய ஆட்டோ பே வசதியும் மின்சார வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.. இதுமட்டுமின்றி, மின் தடை புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய 24 மணி நேரமும் செயல்படும் புதிய கட்டுப்பாட்டு மைய உதவி எண்களையும் அமைச்சர் அறிவித்து மின்துறையை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்..!!

    Advertisement

    கோடை காலங்களில் பொதுவாக மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான்.. இருந்தாலும் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தபோதே தகவல் தெரிவிக்காமல் மின்சாரம் துண்டிக்கப்படாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வாக்குறுதி அளித்திருந்தார்.

    Advertisement

    ஆனால் கடந்த சில நாட்களாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்..

    இதையடுத்து, மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது மின் தடையை நிறுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.மின்சாரத் துறையில் எந்த இடத்தில் எல்லாம் அதிகாரிகளால் தவறு நடந்துள்ளதோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..

    கரண்ட் கட் பிரச்சனை

    ஒரு சில இடங்களில் ஒரு சில தனிநபர்களாலும் மின்தடை ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நகர்ப் புறங்களில் மின்சார பயன்பாடு அதிகாித்துள்ளதால் மின் அழுத்தம் ஏற்பட்டு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சென்னையில் 7 பொறியாளர் குழு அமைக்கப்பட்டு மின்சார கம்பிகள் பழுதாகும் இடங்களை உடனே சென்று பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தொடர்ந்து மின் தடை ஏற்படும் பகுதிகளில் புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கவும், நிலத்தடி மின் கம்பியை வலுப்படுத்தவும், உயர்திறன் மின்மாற்றியை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு தமிழக மக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" என்று விளக்கம் அளித்தார்.

    இப்படி கரண்ட் கட் பிரச்சனைகள் வெடித்து கிளம்பி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் தவெக அரசு பல்வேறு அதிரடிகளையும் மின்துறையில் சத்தமில்லாமல் மேற்கொண்டு வருகிறது.

    மின்சார வாரியம் அசத்தல்

    குறிப்பாக, தமிழகத்தில் மின்சார கட்டணத்தை தற்போது சுமார் 85 சதவீதம் நுகர்வோர் ஆன்லைனில் செலுத்தி வரும் நிலையில், ஒரு நாள் தாமதமாக கட்டணம் செலுத்தினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படுதல் மற்றும் அபராதம் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக வீட்டு உபயோகம், வணிகம் மற்றும் பிற குறைந்த அழுத்த மின்சார நுகர்வோருக்காக தானியங்கி பற்று வசதியை (autopay) செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது..

    Advertisement

    தமிழ்நாடு மின்சார வினியோக நிறுவனம் (TNPDCL) பெடரல் வங்கியுடன் இணைந்து தேசிய தானியங்கி தீர்வு மையம் (NACH) தளம் மூலம் அறிமுகப்படுத்த உள்ள இந்த திட்டத்தில், நுகர்வோர் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அடையாள அங்கீகாரத்தை சமர்ப்பித்து வெப்சைட்டில் பதிவு செய்துகொள்ளலாம்..

    ஆட்டோ பே வசதி

    இந்த வசதி செயல்படுத்தப்பட்டவுடன் மதிப்பீட்டு தேதியில் இருந்து 10-வது நாளில் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து நுகர்வுக்கட்டணங்கள் தானாகவே பற்று வைக்கப்பட்டு மின்னணு ரசீது வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டோபே வசதியை ரத்து செய்வதற்கான விருப்பமும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், வங்கிக்கணக்கில் போதிய நிதி இல்லாத பட்சத்தில் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று வழிகளில் கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்கப்படும் என்பதால், இந்த புதிய வசதி நுகர்வோரிடமிருந்து உறுதிசெய்யப்பட்ட கட்டணங்கள் மூலம் மின் விநியோக நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    கட்டணமில்லா புகார் எண்கள்

    அதேபோல பொதுமக்கள் நன்மைக்காக மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. செய்தியாளர்களிடம் மீண்டும் அமைச்சர் நிர்மல் குமார், "மின்சாரத் துறையில் 80% ஓட்டையை அடைத்து விட்டோம் , மீதம் இருப்பதையும் விரைவில் சரி செய்வோம். பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு, மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் அளிக்கலாம். இது 24 மணி நேரமும் இயங்கும்.

    இதுதவிர கட்டணமில்லா இலவச எண்ணான 1912 ஆகிய எண்ணையும் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Confused About Your EB Payment? Tamil Nadu Power Board Introduces 2 New Options… This Number Could Help Consumers