பெங்களூரில் பணியாற்றுவோருக்கு 60% வரை சம்பளம் உயர்வு.. கர்நாடகாவில் இனி குறைந்த ஊதியமே ரூ.23,376

  • பெங்களூர்: தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி கர்நாடகா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பெங்களூரில் உள்ள தொழிலாளர்களுக்கு இனி மாதத்திற்கு ரூ.23,376 குறைந்தபட்ச ஊதியமாகப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதியளித்தார்.

    Advertisement

    இதையடுத்து தொழிலாளர் துறை அதற்கான நடவடிக்கையை எடுத்து வந்தது. இந்நிலையில் தான் பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க முதல்வர் சித்தராமைய ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடகா தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், ''எங்கள் அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி அறிவிப்பை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் தொழிலாளர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்.

    கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும். இது ஒரு முக்கிய தொழிலாளர் சீர்த்திருத்தம். பெங்களூரில் உள்ள திறமையான தொழிலாளர்கள் (Skilled Workers)மாதம் ரூ.31,114 பெற உரிமை உண்டு. கர்நாடகாவின் பிற பகுதிகளில், இருப்பிடம் மற்றும் வகையை பொறுத்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.19,300 முதல் ரூ.21,251 வரை இருக்கும்'' என்றார்.

    English Summary

    Bengaluru Minimum Monthly Pay: The Karnataka government has issued a bold order, hiking the minimum wage for workers by 60 percent. Consequently, it has been announced that workers in Bengaluru will now receive a minimum monthly wage of Rs.23,376.