சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல் ரேபிடோ, ஓலா உபேர் ஆப்களில் ஆட்டோ கட்டணத்தையும், அதே ஆப்பில் கார் கட்டணத்தையும் ஒப்பிட்டும் விமர்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ம் தேதி ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவில் செல்வதற்கான் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50-ம், அதனைத்தொடர்ந்து செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.25-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களோடு ஒப்பிட்டால் தமிழகத்தில்தான் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அதிகமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் ஆட்டோவில் 2 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கான அடிப்படை கட்டணம் ரூ.36 ஆக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக டெல்லி, திருவனந்தபுரம், அகமதாபாத்தில் 1.5 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30, மும்பை, லக்னோ, பாட்னாவில் 1.5 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கான அடிப்படை கட்டணமாக ரூ.26 ஆக இருக்கிறது. கொல்கத்தாவில் ஆட்டோவில் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல ரூ.25 குறைந்தபட்ச கட்டணமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பிரதேச நகரமான டேராடூனில் 1.5 கிலோ மீட்டர் தூரம் செல்ல ரூ.25 குறைந்தபட்ச கட்டணமாக இருக்கிறது. தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக நிர்ணயித்திருப்பது எந்த பயனும் இல்லை என்று கூறும் சமூக ஆர்வலர்கள், அரசு குறிப்பிட்டுள்ள கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வாங்குவதே இல்லை என்று கூறுகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி தங்கள் இஷ்டத்துக்கு பேரம் பேசி வாங்குவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கிண்டி இண்டஸ்ட்ரியில் எஸ்டேட்டில் இருந்து தாம்பரத்திற்கு கட்டணம் எவ்வளவு ஓலா ஆப்பில் பார்த்தபோது, மினி கார் கட்டணத்தைவிட ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்கிறது. பிரைம் சீடன் கூட 300 ரூபாய் தான். ஆனால் ஆட்டோ கட்டணம் 266 ஆக இருக்கிறது. சென்னையில் இருந்து பல பகுதிகளுக்கு ஆட்டோ கட்டணத்தைவிட கார் கட்டணம் குறைவாக இருக்கிறது. இதனை செய்தி எழுதிய நானே தேடி பார்த்த போதும் கட்டணம் அதிகமாகவே இருந்தது. ஆட்டோ கட்டணம், ஏசி வசதியுடன் உள்ள கார் கட்டணத்தைவிட அதிகமாக இருந்தால் ஆட்டோவில் யார் பயணம் செய்வார்கள். அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டுவிடக்கூடாது என்று ஒரு நெட்டிசன் விமர்சித்திருந்தார். அவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சரி செய்யாவிட்டால் மக்கள் ஆட்டோவில் செல்வது கடினம் ஆகும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்
தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழக வளர்ச்சி.. காவு கொடுக்கப்பட்ட ஹைடன்ஸ் டிஎன்.. ஸ்டாலின் விமர்சனம்