Vijay ஸ்மார்ட் பிளானிங்.. 1 வருடம் மட்டும் வெயிட் பண்ணுங்க.. யாரும் பார்க்காத விஷயம் நடக்கும்!!

  • தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிடிஆர் நிர்மல்குமார், முதலமைச்சர் விஜய்-யின் நிர்வாகப் பாணி மற்றும் அரசின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

    Advertisement

    மக்கள் இதுவரை பார்க்காத புதிய அரசு

    அமைச்சர் நிர்மல்குமார் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இதுவரை அனுபவிக்காத வகையில் வேகமான மற்றும் சுறுசுறுப்பான ஆட்சியை தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் காணப் போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழ்நாட்டில் புதிய அரசுத்துறை, புதிய பணிமுறை உருவாகும் என்றும், அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைச்சர்களையும், முழு நேர மக்கள் பணியில் ஈடுபடும் முதலமைச்சரையும் மக்கள் நேரடியாகக் காண்பார்கள் என்றும் நிர்மல்குமார் அடித்து கூறியுள்ளார்.

    முதலமைச்சர் விஜய்யின் அசாத்திய உழைப்பு

    முதலமைச்சர் விஜய் அவர்களின் தினசரி செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பெருமையுடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். முதல்வர் தற்போதை காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் என்று அவர் கூறினார்.

    மதிய உணவைக் கூட சென்னை தலைமைச் செயலகத்திலேயே எடுத்துக்கொண்டு, அதன் பிறகும் பல்வேறு துறைகளின் கோப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டினார். நிர்வாகச் செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு, ஒவ்வொரு திட்டத்தையும் கண்காணிக்கும் பணியில் முதலமைச்சர் தீவிரமாகச் செயல்படுகிறார் என்று நிர்மல்குமார் விவரித்தார்.

    Advertisement

    ஒரு வருடத்தில் முழு பலன் தெரியும்

    தற்போது தொடங்கப்பட்டுள்ள நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் அரசுத் திட்டங்களின் முழு விளைவுகளும் இன்னும் ஒரு வருடத்திற்குள் மக்களுக்கு தெளிவாகத் தெரியும் என்று அமைச்சர் நிர்மல்குமார் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக அரசு தனது முதல் கட்ட ஆட்சிக்காலத்தை செயல்திறன் மிக்க நிர்வாக காலமாக மாற்ற முயற்சித்து வருகிறது. மக்கள் சேவை, துறை வாரியான கண்காணிப்பு மற்றும் திட்ட அமலாக்கம் போன்ற அம்சங்களில் புதிய அரசு தனித்துவமான நிர்வாக மாடலை உருவாக்க முயற்சி செய்கிறது என தெரிகிறது.

    அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சு வேகமாகப் பரவி வருகிறது.

    Advertisement

    புதிய அரசு மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு, முதலமைச்சர் விஜய்யின் நேரடி நிர்வாக ஈடுபாடு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இதேவேளையில் தமிழ்நாடு அரசு பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளது. தற்போது தாமதம் ஏற்படும் என கூறப்பட்டாலும், விரைவில் தாக்கல் செய்ய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பணிகளை செய்து வருகிறது.

    English Summary

    Tamil Nadu Electricity Minister Nirmal Kumar has made a strong statement that within one year people will witness an entirely new style of governance under Chief Minister Vijay, with active ministers and a fully dedicated leader.