101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி

  • சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்றவர்களில் மொத்தம் 145 பேர் முதல் முறை எம்எல்ஏவாக உள்ளனர். இதில் 107 பேர் தவெகவை சேர்ந்தவர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் வரும் 18ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான், புதிய எம்எல்ஏ-க்களுக்கான 2 நாள் பயிற்சிக்கு சபநாயகர் ஜேசிடி பிரபாகர் முடிவு செய்துள்ளார்.

    Advertisement

    மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் சுமார் 145 பேர் முதன் முறை சட்டசபை உறுப்பினர்கள் ஆவர். இது அவையின் மொத்த பலத்தில் கிட்டத்தட்ட 61 சதவீதமாகும்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் வென்றார். திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இப்போது தவெகவிற்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

    காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழக சட்டசபையில் மொத்தம் 5 இடங்கள் காலியாக உள்ளனர் (விஜய்யின் திருச்சி கிழக்கு + 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா). மொத்தம் 229 பேர் எம்எல்ஏவாக உள்ளனர்.

    Advertisement

    இதில் தவெகவை சேர்ந்தவர்களில் 101 பேர் முதல் முறை எம்எல்ஏவாக உள்ளனர். இதில் முதல்வர் விஜய்யும் அடங்குவார். அவரும் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றள்ளார். அதேபோல் பிற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை எடுத்து கொண்டால் 44 பேர் முதல் முறையாக எம்எல்ஏவாக உள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு சட்டசபை நடைமுறை, சட்டசபை விதிகள் மற்றும் சட்டசபை செயல்பாடுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் முதல்வரான பிறகு நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்புக்கு சட்டசபை கூடியது. அதன்பிறகு வரும் 18 ம் தேதி சட்டசபை கூடுகிறது. ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் சட்டசபை கூடுகிறது.

    Advertisement

    இதனால் அதற்கு முன்பாகசட்டசபை விதிகள், நடைமுறை, செயல்பாடு பற்றி முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ள 145 பேருக்கும் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்குவதற்காக 2 நாள் பயிற்சி முகாம் நடத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முடிவெடுத்துள்ளார். இதுபற்றி சட்டசபை செயலக அதிகாரிகள் கூறுகையில், ''இந்த அறிமுக பயிற்சி முகாம் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். 17வது சட்டசபை முதல் கூட்டத்தொடர் ஜூன் 18ம் தேதி ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் தொடங்க உள்ளது. மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் சுமார் 145 பேர் முதன் முறை சட்டசபை உறுப்பினர்கள் ஆவர். இது அவையின் மொத்த பலத்தில் கிட்டத்தட்ட 61 சதவீதமாகும்.

    Advertisement

    தவெகவில் 107 எம்எல்ஏக்களில் 101 பேர் புதியவர்கள். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், கே.ஏ. செங்கோட்டையன், என் சுப்பிரமணியன், எம்வி கருப்பையா மற்றும் ரெட்டியார்பட்டி வி. நாராயணன் போன்ற ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். தவெகவினருடன் சேர்த்து அதிமுக, திமுக மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் இந்த பயிற்சியில் இயை உள்ளனர்.

    புதிய எம்எல்ஏக்களை கருத்தில் கொண்டு, அவையின் செயல்பாடுகள், சட்டசபை நடைமுறைகள் மற்றும் மரபுகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவது முக்கியம் என்று சபாநாயகர் கருதியதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தப் பயிற்சி முதன்மையாக புதிய எம்.எல்.ஏ-க்களுக்காகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களும் இதில் பங்கேற்கலாம். இந்த பயிற்சி முகாமில் சட்டசபை விதிகள், அலுவல்கள், கேள்வி நேரம், விவாதங்கள், சபைக்குள் எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் பற்றி எடுத்துரைக்கப்படும்'' என்றார்.

    English Summary

    A total of 145 winners in the Tamil Nadu Assembly elections are first-time MLAs. Of these, 107 belong to TVK.