இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக?

  • சென்னை: தவெக தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க மேற்கொள்ளும் அரசியல் நகர்வுகள் குறித்தும், அதற்கு கூட்டணிக் கட்சிகள் தெரிவிக்கும் எதிர்ப்புகள் குறித்தும் ரவீந்திரன் துரைசாமி முக்கிய கருத்து ஒன்று கூறியிருக்கிறார்.. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா மற்றும் சபாநாயகரின் சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிமுக தரப்பில் எழுப்பப்படும் நுணுக்கமான கேள்விகளையும் அந்த பேட்டியில் விளக்கி உள்ளார். அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சட்டமன்றத்தின் மொத்த எண்ணிக்கையில் இந்த 4 பேர் ராஜினாமா செய்த உடனே, அவையின் மொத்த எண்ணிக்கை குறைகிறது.. இதனால் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மைக்கான மேஜிக் நம்பர் என்பதும் குறைகிறது.. இது தவெகக்கு பிளஸ்தான்..

    Advertisement

    அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்

    இந்த நடவடிக்கைகளால் தங்களின் முக்கியத்துவம் குறைவதாகக் கருதி, விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. இருந்தாலும் இந்த முயற்சியில் தவெக வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.. மேலும் பல அண்ணா திமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவெகவை நோக்கி நகர்வதற்கே சூழல் சாதகமாக இருக்கிறது..

    அதேசமயம், சபாநாயகரின் இந்த நடவடிக்கையை அண்ணா திமுக தரப்பு கடுமையாகக் கேள்வி எழுப்புகிறது.. கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவை மீறி அவர்கள் எப்போது வாக்களித்தார்களோ, அந்த நிமிடமே அவர்கள் தகுதி நீக்கத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.. சட்டப்படி அவர்களின் எம்.எல்.ஏ. பதவி அப்போதே செல்லாமல் போய்விடுகிறது.

    Advertisement

    சபாநாயகரின் தகுதி நீக்கம்

    உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி தகுதி இழப்பு செய்திருக்க வேண்டிய சபாநாயகர், அதை அறிவிக்காமல் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தொடர்வது போலக் காட்டி, தற்போது அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்ற நிலைப்பாட்டை அண்ணா திமுக எடுத்துள்ளது.

    இந்த டெக்னிக்கல் பாயிண்ட்டை முன்வைத்தே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வெறும் 5 நிமிடங்களில் சபாநாயகர் ஏன் ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வியை அண்ணா திமுகவின் இன்பத்துரை எழுப்பியுள்ளார்.. சபாநாயகர் நடைமுறைச் சட்டங்களைப் பற்றிப் பேசுகிறாரே தவிர, உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்களை மறைக்கிறார் என்று அண்ணா திமுக குற்றம் சாட்டுகிறது..

    Advertisement

    சபாநாயகரின் நாலேட்ஜிற்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும்.. அண்ணா திமுக பொதுச்செயலாளரின் கொறடா உத்தரவை மீறி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த அந்த நிமிடமே அவர்களின் எம்எல்ஏ பதவி போய்விட்டது என்பது சபாநாயகருக்குத் தெரிந்தும், அவர் அதுகுறித்த தீர்ப்பை வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்..

    மெட்டீரியல் லா எங்கே

    அவர்கள் தங்களின் கைப்பட கடிதம் தராமல், பேப்பரில் எழுதித் தந்த நடைமுறைச் சட்டங்களைப் பற்றி மட்டுமே சபாநாயகர் பேசுகிறார்.. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர்கள் வாக்களித்த நிமிடமே தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்ற மெட்டீரியல் லாவை சபாநாயகர் மறைக்கிறார்..

    Advertisement

    இதைத்தான் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் இன்பத்துரை தொடர்ந்து அஜிடேட் பண்ணி வருகிறார்.. இந்த விவகாரம் இதோடு நிற்காது, அதிமுக சார்பாக இந்தச் சட்டம் மற்றும் தகுதி நீக்கப் பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றம் வரை செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்..

    தவெக பொறுத்தவரையில், தாங்கள் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் பிடியில் இருந்து முற்றிலும் இன்டிபென்டென்டாக வெளியே வர வேண்டும் என்பதற்காகவே தங்களது அரசியல் காய்களை மிகத் தீவிரமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்..

    செல்வப்பெருந்தகை, இன்பதுரை

    இதில் செல்வப்பெருந்தகை போன்ற ஒருசில காங்கிரஸ்காரர்களுக்கு தாவேக்காவின் இந்த அரசியல் நகர்வு மிகத் தெளிவாகவே புரிகிறது.. ஆனால், மாணிக் தாகூர் போன்றவர்கள் இன்னும் தூக்கத்தில் இருப்பதனால் அவர்களுக்கு இந்த அரசியல் நகர்வுகள் எதுவும் புரியவில்லை.. இது அடுத்தடுத்து எப்படி நகரப் போகிறது என்பதை வரும் நாட்களில் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

    Advertisement

    கட்சி தாவல் தடைச் சட்டம் பாய்வதைத் தடுப்பதற்காகவும், அந்த முயற்சிகள் நடைபெறுவதாலேயே நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் வருகிறது.. குறிப்பாக, இந்த விவகாரத்தில் குதிரைபேரம் நடைபெற்றதாக எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..

    இந்த குதிரைபேரம் விவகாரத்தில், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அமமுக தலைவர் டிடிவி தினகரனும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்றம் நேரடியாகவோ அல்லது ஏதேனும் ஒரு ஏஜென்சி மூலமாகவோ விசாரணையில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வாய்ப்புகள் உண்டு.

    இதனை வெறும் அரசியல் குற்றச்சாட்டாக மட்டும் கடந்து போகாமல், உரிய நடவடிக்கைக்காக அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றால், டிடிவி தினகரனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நீதிமன்றம் மூலமாக நல்ல தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்..

    ஏற்கனவே அதிமுக 2 பிளவாக இருக்கக்கூடிய நிலையில், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதைப் பார்க்க முடிகிறது.

    வேலுமணி - எடப்பாடி பழனிசாமி

    அதேபோல, நேற்று எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்களாக இருந்த 5 பேர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இணைந்து கொண்ட காட்சிகளையும் நாம் பார்க்கிறோம்.. ஆனால், அதிமுகவில் முந்தைய பிளவுகளுக்கும், இப்பொழுது ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.. இப்பொழுது பிளவில் ஈடுபட்டுள்ள சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி போன்றவர்கள் எல்லாமே ஏற்கனவே தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓபிஎஸ் போன்றவர்களுக்கு எதிராக "ஒற்றை தலைமை" என முழு அதிகாரத்தையும் எடப்பாடி பழனிச்சாமியிடம் குவித்தவர்கள் ஆவர்.

    இப்போது அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிச்சாமி, பதவியிலிருந்தே அவர்களை தூக்கியுள்ளார்.. அதனால் சிவி சண்முகம், வேலுமணி தரப்பினர் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளனர்.. எனவே அண்ணா திமுக, இரட்டை இலை, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று தங்களை எம்பவர் பண்ணிய தங்களின் வழக்கமான சென்டிமென்ட்டிற்கு போக அவர்கள் பார்க்கிறார்கள்.

    மாட்டிக்கிட்டு விழிக்கும் வேலுமணி?

    ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியிருப்பதால், அவர் பல நிபந்தனைகளை விதித்துத் தன்னுடைய தலைமையின் அதிகாரத்தைக் காட்டுகிறார்.. இந்த அரசியல் சூழலுக்குள் தங்களுக்கு என்று ஒரு சரியான தலைவர் இல்லாமல், அவசர கோலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து ரிவோல்ட் பண்ணிய எஸ்பி வேலுமணியும், சிவி சண்முகமும் மாட்டிக்கொண்டு விழிப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

    தங்களிடம் போதிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வராமல், அவசரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்ததால், அவர்கள் இப்பொழுது அரசியல் ரீதியாக மாட்டிக்கொண்டு விழிப்பதாகவே தெரிகிறது. இவர்களின் அரசியல் எதிர்காலம் என்பது இனி எடப்பாடி பழனிச்சாமி எடுக்கப்போகும் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்ற சூழ்நிலை இப்பொழுது உருவாகியுள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Inbadurai AIADMK MP warns of Supreme Court action over Speaker's 5-minute order on TVK issue