தமிழக சட்டசபை நிகழ்வுகளை பார்க்க தலைமை செயலகம் வந்த இன்பநிதி!

  • சென்னை: தமிழக சட்டசபையின் அவை நடவடிக்கைகளை இன்று பார்வையிட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி வருகை வந்தார். பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இன்று அவை நடவடிக்கைகளை இன்பன் உதயநிதி கவனித்தார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதல்வர் விஜய்யின் துறை என்பதால், இன்று அவையில் காரசாரமாக வாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தவெக ஆட்சியின் 100 நாள் ஆட்சியில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து ஆதாரப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    சுமார் அரை மணி நேரம் உதயநிதி ஸ்டாலின் இன்றைய விவாத்தில் பங்கேற்று பேசினார். இது ஒருபக்கம் இருக்க தமிழக சட்டசபையின் அவை நடவடிக்கைகளை இன்று பார்வையிட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி வருகை வந்தார். பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இன்று அவை நடவடிக்கைகளை இன்பன் உதயநிதி கவனித்தார்.

    தனது தந்தையும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், இன்று மிக முக்கியமான விவாதத்தில் பங்கேற்று பேசுவதால் அவரது உரையை கேட்க சட்டசபைக்கு வருகை தந்ததாக தெரிகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் சட்டமன்றம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டம் நடைபெற்ற போது, உதயநிதி ஸ்டாலின் பேச்சை பார்க்க, திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனும் உதயநிதியின் தங்கை கணவருமான சபரீசன்' வந்திருந்தார்.

    Advertisement

    உதயநிதி பேசும் போது, பார்வையாளர் மாடத்திற்கு சென்று அங்கிருந்து அவை நிகழ்வுகளைப் பார்வையிட்டார். பின்னர் உதயநிதி பேசி முடித்ததும், இன்பநிதி புறப்பட்டு சென்றார்.

    English Summary

    Inban Udhayanidhi, son of Leader of the Opposition Udhayanidhi Stalin, visited the Tamil Nadu Legislative Assembly today to observe the proceedings. He watched the day's proceedings from the visitors' gallery.